படமும் கற்றலும் : 018
#படமும்கற்றலும் ; 017 / Part 2



” It is only when the mind is free from the old that it meets everything anew, and in that there is joy. “
சிலர் பழையதை பிடித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு இப்போது கண் முன்னே நடப்பது மிக முக்கியமான ஒன்று அல்ல. நேற்று, போன வாரம், போன மாதம், போன வருடம் நடந்த ஒரு நிகழ்வு மிக முக்கியமான ஒன்று. அதுவும் Negative ஆக இருந்து விட்டால் அங்கேயே வாழ்வார்கள். அதுவே அவர்களின் நிகழ்கால வாழ்க்கை. JK அதை மேலே வார்த்தைகளால் சொல்கிறார். நாம் இங்கே இன்று வாழ்கிறோமா அல்லது வேறு ஏதோ காலக்கட்டத்தில் வாழ்கிறோமா .. எங்கே வாழ்கிறோம் ?



” do it or don’t do it but get on with it… “
ஒன்று செய். அல்லது செய்யாதே. ஆனால் .. இந்த இரண்டில் ஏதோ ஒன்றுடன் வாழ். – என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று ! செய்துவிட்டு குறை சொல்வது, செய்யாமல் இருந்து விட்டு அட செய்யாது விட்டு விட்டோமே என்று புலம்புவது …. இவை வாழ்க்கை வீணாகும் பக்கங்கள். JK பேசும்போது இதை போன்ற தத்துவங்களை விவரித்துக்கொண்டே செல்வார். ” அங்கே இரு அல்லது இங்கே இரு. எங்கும் இருக்க முயற்சிக்காதே ! “



” When one loses the deep intimate relationship with nature, then temples, mosques and churches become important. “
இயற்கையை மறந்தவன் மறந்தவள் கோவில் சர்ச் மசூதி நோக்கி பயணிப்பான். பாள். இதுவே யதார்த்தம். இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு உண்மை இது ! காட்டை, ஆற்றை, மலையை, மழையை, மேகத்தை, வெளியை, சூரியனை, நிலவை …தானே நாம் கும்பிட வேண்டும் ? இவற்றிற்கு எதற்கு Representation ? பின் அதில் எது பெரியது என்று சண்டை / பெருமை / வீண் விவாதங்கள் ? காட்டிற்குள் சென்று வந்தவன், மழையில் நனைந்தவன், ஆற்றில் குளித்தவன் … பெருமை பேசுவதில்லை ! தான் எவ்வளவு சிறிய அற்பமான இயக்கம் என்று உணர்கிறான். தான் ஒரு அற்பமான இயக்கம் என்று உணரவைக்கும் இயற்கை தான் பெரும் கடவுள் !
நல்ல வேளை .. JK இப்போது இருந்திருந்தால் ஆரிய திராவிட நாத்திக ஆத்திக விவாதங்களில் அவரையும் கொண்டு வந்திருப்பார்கள். அவரும் … சிரித்து கொண்டே இவர்களை கடந்திருப்பார் !


