படமும் கற்றலும் : 021
#படமும்கற்றலும் ; 021
” நம்மை சுற்றி நடப்பவை நம் Control ல் இல்லாது நடக்கும்போது … அமைதியாய் ஒரு சாட்சியாய் பார்ப்பதை விட வேறு நிலை எதுவும் இல்லை ! “



சமீபத்தில் ஒரு ஆங்கில படம் பார்த்தேன். Germany யில் போர்க்கால நேரங்களில் நிகழ்வதை கதையாக கொண்ட படம். சுற்றி குண்டு வெடிப்புகளும், இராணுவ வீரர்கள் எதிரிகளை தேடி தேடி கொல்லும்போது .. ஒரு வயதானவர் தன் வீட்டிற்குள் ( அந்த வீட்டின் வெளிப்பக்கம் குண்டுகளால் துளைக்கப்பட்டு இருக்கும் ! ) அமர்ந்து கொண்டு தன்னுடைய பழைய மிதிவண்டியை சரி செய்து கொண்டு இருப்பார்.
” என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ” என்கிற கேள்விக்கு பெருமூச்சு விட்டபடி அவர் சொல்லும் பதில் மிக முக்கியமான ஒன்று.
” என் தினசரி வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறேன். இல்லை எனில், போரை விட, போரை பற்றிய பயம் என்னை கொல்லக்கூடும் ! ” “
அதுதான் சாட்சியாக வாழ்தல். போர் நம் Control ல் இல்லை. நம் வட்டத்துக்குள், வசத்துக்குள் இல்லாத ஒன்றை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ? இன்னமும் சரியாக சொல்ல வேண்டும் எனில் .. நம்மால் எப்படி கவலைப்பட முடியும் ? அதுதான் நம் Control இலேயே இல்லையே ! ,



தூர பொங்கிக்கொண்டு இருக்கும் மலை, அதன் எரிமலை குழம்பு புகையாக வான் நோக்கி வெளியேறி, வரப்போகும் ஆபத்திற்கு முன்னோட்டம் கொடுக்கிறது. அதை தன் கோவில் வாசலில் இருந்து கவனிக்கும் ஒரு மனிதன். கோவிலுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்பது அவனின் எண்ணமாக இருக்கலாம். ஆனால் பிழம்பும் எரிமலை குழம்பு முன் அவன் just ஒரு Witness.
” நடப்பது நடக்கட்டும் ” என்று மட்டுமே அவனின் மனதிற்குள் இருக்க கூடும். ஏனெனில் எதிரில் நடக்கும் விடயத்தில் எந்த Control ம் அவனிடம் இல்லை !



வாசல் வரை வந்த ஆற்று வெள்ள நீரை பார்த்துக்கொண்டு வீட்டிற்குள் அமர்ந்து இருந்தவனை காப்பாற்ற போன இராணுவ படை வீரர் ” ஏன் இப்படி அமர்ந்திருக்கிறாய் ? ” என்று கேட்ட போது அவன் சொன்ன பதில் ..
” வேறு என்ன செய்வது ? இங்கே நான் செய்ய ஒன்றும் இல்லை. பெரும் ஆறு. பெரும் உதவி. இதை இரண்டையும் தவிர என்னை காக்க போவது எதுவும் இல்லை என்பதால் அமைதியாக அமர்ந்து இருந்தேன். வந்ததால் உங்களுடன் பேசுகிறேன். நீங்கள் வரவில்லை எனில் ஆற்றை பார்த்துக்கொண்டு இருந்திருப்பேன் – அது என்னை பார்க்காது விட்டாலும் ! “



Witness வாழ்க்கை என்பது ஒரு தனித்துவ வாழ்க்கை. ” அங்கே நம் கையில் எதுவும் இல்லை என்பது தான் கரு. ” Just வாழ்தல் மட்டுமே அங்கே தேவை.
அப்படி வாழ்ந்தால் ?.
ஒருவேளை .. மனிதர்கள் காப்பாற்றப்பட்டு விடக்க்கூடும் !


