நான் எனப்படும் நான் : 134
” கடின காலத்தில் உடன் இருந்துவிட்டு இருந்த அடையாளம் தெரியாது மறைந்து விட வேண்டும். மனிதம் அங்கே தான் துளிர்க்கிறது ! “
5pmlive இரண்டாம் பாகம் 48 நாட்களாக நடந்து நேற்று முடிந்தது. ஒரே ஒரு நோக்கம் தான். கடின காலத்தில் துணையாக பயணிப்பது. பின் ?. சரியான நேரத்தில் ஆரம்பிப்பது போல, சரியான நேரத்தில் நிறைவு செய்து விட்டு .. இருந்த தடம் தெரியாது அந்த Space ல் இருந்து மறைதல். நோக்கம் சரி எனில், மறைதலும் சரியே. கடின காலலங்களில் நமது emotions .. imbalanced ஆக மாறும். அப்போது அந்த மனதிற்கு தேவை நல்ல சிந்தனைகள். அவ்வளவே. மீத முடிவுகளை அது எடுத்துக்கொள்ளும்.
ஒரு முறை என் பயணத்தில் எனது Car பழுதுபட்டு நின்ற போது .. யாரோ ஒருவர் வந்தார். தேவையான உதவிகளை செய்தார். ” வரேன் சார் ” என்று சொல்கிவிட்டு சட்டென மறைந்துவிட்டார். அடுத்து வந்த இன்னொருவர் புது வழி சொன்னார். இன்னொரு மனிதர் பக்கத்தில் இருந்த அருவி ஒன்றுக்கு புது வழி சொன்னார். ஆக … அந்த பயணம் யாரோ மனிதர்களால் அழகாக முடிந்தது. இன்னமும் நினைவில் இருக்கிறது. அப்படித்தான் வாழ்க்கையும். நமது கடின காலங்களில் யாரோ வந்து உதவி செய்துவிட்டு இடத்தை விட்டு அகன்று இருப்பார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் நம் எண்ணங்களில் கூட இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் செய்த உதவி பேருதவியாக எண்ணங்களில் நிலைத்து இருக்கும் !
Zen துறவி ஒருவரிடம் சீடர் கேட்டார்.
” நீங்கள் செய்த உதவிகளை என்னால் மறக்க இயலாது. காலத்திற்கும் உங்களை நினைவு கொள்வேன். உங்களது உதவிகள் மிக மிக மதிப்பு மிக்கவை. என் குடும்பம் இன்று நன்றாக இருக்கிறது. கணவன் மனைவி உறவு சீராக இருக்கிறது. குழந்தைகள் நன்கு படிக்கிறார்கள். உறவினர்களுடன் உறவு நன்கு மலர்ந்து இருக்கிறது. நல்ல நட்பு வட்டம் கிடைத்து இருக்கிறது. நீங்கள் செய்த உதவி மிகப் பெரியது ! “
இப்போது Zen துறவி கேட்டார்…
” அப்படியா ? அந்த ” நீங்கள் ” ” நீங்கள் ” என்று குறிப்பிடுகிறீர்களே .. அவர் யார் ? எங்கே இருக்கிறார் ? அவரிடம் எனது வாழ்த்துகளையும் சொல்லி விடவும் “





