படமும் கற்றலும் : 024
#படமும்கற்றலும் ; 024
” Its not about what we have or what we don’t have. Its about HOW WE ARE with what we have ! “



காட்சி 01
நிறைய சம்பாதிக்கிறோம். இடம், வீடு, Car …அனைத்தும் வருகிறது. குடும்பம் குழந்தை என்று வாழ்கிறோம். ஆனாலும் இவ்வளவுக்கு பிறகும் என்னவோ இல்லாதது போலவே ஒடுகிறோம்.
காட்சி 02
பணம் போதவில்லை. ஒடுகிறோம். உழைக்கிறோம். முயற்சிகள் செய்கிறோம். புதியன கண்டுபிடிக்கிறோம். வாழ்வு வாசலுக்கும் வரவேற்ப்பறைக்கும் வந்து வந்து போகிறது. எதையோ தொட எதையோ இழக்க .. மனநிறைவு இல்லாது வாழ்கிறோம்.
காட்சி 03 ;
மேலே உள்ள புகைப்படம்.



பிறப்பு ஒன்று மட்டுமே இங்கே அனைவர்க்கும் பொது. அதன் பிறகு ஏற்றமும் இறக்கமும் அனைத்து பக்கங்களிலும் தன் முகத்தை காட்டிகொண்டே இருக்கிறது. பிறந்த குடும்ப சூழலில் ஆரம்பித்து, படிப்பு, வேலை, திருமணம், குழந்தை வளர்ப்பு … அனைத்தும் ஏற்றமும் இறக்கமுமாய் !
இருப்பதை வைத்து வாழ்வதில் இருக்கும் நிறைவு எவ்வளவு சம்பாதித்தாலும் கிடைப்பது இல்லை. அல்லது எவ்வளவு சம்பாதிக்க நினைத்தாலும் கிடைப்பது இல்லை. ஆனாலும் ஏன் இவ்வளவு முரண் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்கிறோம்? – அதாவது எதற்காகவாவது ஏங்கிக்கொண்டே !
காரணங்கள் மிக எளிது.



