படம் சொல்லும் பாடம் – 038
” உனக்கு மகிழ்வை தருவதை செய். “



” நான் பணம் சம்பாதிக்க எழுதவில்லை. எழுதுவது எனக்கு பிடிக்கும். எழுதுகிறேன். அவ்வளவே “
சொல்வது இங்கிலாந்தின் இப்போதைய பணக்கார பெண்மணிகளில் ஒருவர் – JK Rowling. அவரின் கதை தான் படம்.



அம்மா தங்கை அப்பா / என்ற குடும்பத்தில், அப்பாவும் அம்மாவும் காலம் செல்ல செல்ல காணாமல் போக தங்கை மட்டும் கடைசி வரை !
தன்னில் இருக்கும் எழுத்தாளரை காதலிப்பதாக சொன்னவன், தன்னை ஏமாற்ற, அங்கே இருந்து கையில் குழந்தையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிவுடன் படம் பயணிக்கிறது. பிற்காலத்தில் பெரும் ஆளுமையாக வரப்போவது தெரியாமல் தான் நாம் பல தவறுகள் செய்கிறோம். அதில் ஒன்று … நமக்கு எதிரே இருக்கும் திறமைகளை துச்சமாக மதித்து பேசுவது. காலம் அவர்களை உயர்த்தும்போது முகத்தை நாம் எங்கே வைப்போம் என்று தெரியவில்லை ! ( அப்போது ஏமாற்றிய அந்த மனிதனின் இப்போதைய மனநிலை என்னவாக இருக்கும் ? )



Passionate ஆக, கனவுடன் பயணிப்பவரா நீங்கள் ?
கடைசி 30 நிமிடங்கள் உங்களுக்கு. தான் எழுதியதை புத்தகமாக பார்க்கும் அந்த ஒரு காட்சி போதும். நமக்குள் ஆனந்த கண்ணீர் பீறிட்டு வெளிவர !
” YOU NEVER KNOW WHAT HAPPENS WITH WHAT YOU HAVE AS PASSION “
என்ற வாக்கியத்தின் படி வாழ்க்கை நமக்கு கொடுக்கவிருப்பது என்னவென்றே தெரியாத நிலையில் … கையில் இருக்கும் திறமையும், மனதில் இருக்கும் கனவும், வழியெங்கும் நிறையும் Passion ம் தான் … வெற்றியாளர்கள் வைத்திருக்கும் அகக் கவசம். !