படம் சொல்லும் பாடம் – 040
” Man Made Disaster is the Worst of all “



பல வருடங்ளுக்கு பின் தன்னை பிரிந்து சென்ற காதலனை சந்திக்கும் பெண், காதலியை மகனுடன் சந்திக்கும் காதலன், அவன் வேலை செய்யும் தீயணைப்பு துறை … plus … Chernobyl அணு உலையும் அது வெடித்து சிதறும் ஆரம்பமும் ! அவ்வளவு தான் கதை. படம் ஆரம்பித்து முடியும் வரை … வேறு எதையும் யோசிக்க, கவனிக்க, பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு படம். படம் முடிந்த பின் ? வேறு எதையும் யோசிக்க, கவனிக்க பார்க்க பிடிக்கவில்லை. Plus … கூடங்குளம் தான் நினைவில் – முழுக்க, முழுக்க ! நமக்கு அருகில் தூங்கி கொண்டு இருக்கும் அபாயமோ என்று மனதில் ஒரு வலி மிகுந்த கேள்வி !



” நீதான் என் அப்பாவா ? “
” தெரியலை. அம்மா என்ன சொன்னா ? “
மௌனமாக பார்க்கும் மகன். அந்த பார்வை, இசை, மௌனம் … எவ்வளவு விடயங்களை சொல்லி விடுகிறது ?
பேருந்தை தன் காரை குறுக்கே வைத்து நிறுத்திவிட்டு காதலி உடன் வந்தால் தான் காரை எடுப்பேன் என்று சொல்லும்போது .. நம்ம மௌன ராகம் கார்த்திக் நினைவில். ஆனால் அவரை விட Handsome ஆக ஒரு காதலன். ( தீயணைப்பு வீரர் உடையில் Cap உடன் நிற்கும் அழகே அழகு ! ).
” ஏன் என்னிடம் சொல்லவில்லை ? “
” நீ எங்கே இருக்கிறாய் என்று எனக்கு எப்படி தெரியும் ? “
இந்த இரண்டே கேள்விகளில் பழைய கதையை நமக்கு புரியவைக்கும் இலாவகம் ! அட்டகாச இயக்கம்.



” Reward க்காக வந்தாயா ? “
” நீங்கள் எதற்காக “
” என் கடமை “
” அதே “
என்று அணு உலையின் Water Gate ஐ திறக்க செல்லும் அந்த இராணுவ Major ம், அவரின் குழுவும், Hero வும் … படம் பார்க்கும்போது ” இது நமக்கு அருகில் இருக்கிறதே …இப்படி நமக்கும் நடக்கலாமே ” என்று உணர்த்திக்கொண்டே இருக்கிறது காட்சிகள். உடல் முழுக்க கொப்புளங்கள், வாந்தி, இரத்த கசிவு .. என்று பார்க்கும்போது .. என்ன benefit இருந்தாலும் அணு உலை ஒன்று தேவையா என்று மனம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.



இது வரை பார்த்த படங்களில் மனதில் என்னவோ ஒன்றை தொட்டு பாதிப்பை ஏற்படுத்தும் படம். ஒரு அணு உலை என்பது .. எப்போது வேண்டுமானாலும் விழிக்க காத்திருக்கும் Pandemic எமன் என்பது நமக்கு ஏன் புரியாமல் போனது ?
அணு உலைக்கு ஆயிரம் நல்ல காரணங்கள் சொன்னாலும் அவர்களால் சொல்ல முடியாமல் போகும் ஒரு பதில் …
” இரத்த கசிவுடன், தோல் வெடித்து, மடிந்து அமர்ந்து, பின் படுத்து …கண்ணை மூடும் அடுத்த தலைமுறைக்கு .. என்ன சொல்வீர்கள் ? ” என்பதே !



அனைவரும் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும்.


