படம் சொல்லும் பாடம் – 043
” Unexpected situation in business is an opportunity for the Talent to Prove itself “



பெரிய திருப்பங்கள் இல்லாத ஆப்ரிக்க திரைப்படம். ஆனால் .. வியாபார நுணுக்கங்களை அசத்தலாக கற்றுக்கொடுகிறது. ஆழமான விடயங்களை மிக மிக எளிதான காட்சிகளில் சொல்லிவிடுகிறது.
அப்பா ஒரு பெரும் Travels நிறுவன Founder. சட்டென அவருக்கு உடல்நிலையில் ஒரு பின்னடைவு !. நிறுவனத்தை யார் இப்போது பொறுப்பேற்பது ? என்கிற கேள்விக்கு 07 வருடங்களாக உடன் பயணிக்கும் மகள் தான் என்று அனைவருக்கும் மனதில். ஆனால் அப்பா தன் தம்பியை பொறுப்பாக்குகிறார். மகளுக்கு ஆச்சர்யம், கோபம், இயலாமை மற்றும் சிறு மன அளவில் தொய்வு. இந்த நேரத்தில் நிறுவனம் பெரும் கடனில் மாட்டிக கொண்டு இருப்பது Auditor மூலம் தெரிய வர … தம்பியும், மகளுமாக என்ன செய்தார்கள் / நிறுவனம் மீண்டும் வெற்றிகரமான ஒன்றாக மாறியதா ? என்பதே கதை. முன்னமே சொன்னது போல கதையில் ஒன்றும் பெரிய twist turn என்று எதுவும் இல்லை. ஆனால் …



ஒரு சிறு வாக்குவாதம் செய்யும் தொழிலாளிகளை நேரடியாக பேசி சரி செய்வது, இனிக்க இனிக்க பேசும் ஆனால் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட எதிராக செயல்படும் பங்குதாரரை கவனிக்க ஆரம்பிப்பது, நட்புக்கள் எல்லாம் business க்கு உதவாது என்று புரிவது, நல்ல நோக்கத்தில் செய்யும் உதவியே businessன் மிகப்பெரும் Asset என்று உணர்வது, பெரும் வியாபார ஆளுமைகளின் சூழ்நிலை சார்ந்த எண்ண மாற்றங்கள், இரு பெரும் நிர்வாக முதலாளிகளின் சந்திப்பில் இருக்கும் வியாபார சூட்சுமம் … அசத்தலாக சில அடிப்படை வியாபார நுணுக்கங்களை இந்த படம் அலசுகிறது. எப்போதுமே சாதாரணமாக சொல்லப்படுவதை நாம் கவனிக்காமல் கடந்து போய்விடும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால் காட்சி அமைப்புகளை கவனமாக பார்க்கலாம். வியாபார பாடங்கள் மிக அதிகம்.



தம்பியாக வரும் நடிகரும் அப்பாவாக வரும் நடிகரும் அவர்களின் அனுபவத்தை நடிப்பாக சிரித்த வண்ணம் casual ஆக கொடுப்பது மிக அழகாக இருக்கிறது. மகளின் நடிப்பு இன்னமும் நிறைய முன்னேற வேண்டும் என்றாலும் .. யதார்த்தமாக நடிக்க முயற்சிப்பதில் வெற்றி பெறுகிறார். சின்ன சின்ன Characters ஆங்காங்கே தங்கள் பங்களிப்பை செய்கின்றன.



வியாபார நுணுக்கங்களை படமாக சொல்வது எளிது அல்ல. Cinemaத்தனம் அதில் உள்ளே புகுந்து விடும். ஆனால் இதில் அப்படி இல்லை. ஏதோ நமக்கு தெரிந்த ஒரு குடும்பத்தின் கதையை அருகில் இருந்து பார்ப்பது போல இருக்கிறது.
ஓரிரு காட்சிகள் தவிர .. வியாபார குடும்பங்கள் ஒன்றாகவே அமர்ந்து பார்க்கலாம். சில நுணுக்கங்கள் புரியவரும்.


