நான் எனப்படும் நான் : 146
” If you don’t uncover your best, then, Someone else Will ! “



” ஜெய் .. உங்களின் அந்த கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது. “
இருவரும் சிரித்தோம்.
” தொழில் செய்கிறேன். ஆனால் இப்படி யோசிக்கவில்லை. Makes sense. “
ஆம். சில கேள்விகள் நம் போக்கை மாற்றிவிடும். சில கேள்விகள் நம் பார்வையை. ஆனால் சிலவை நம்மையே !
” எங்கே இருந்து இந்த அனுபவங்கள் உங்களுக்கு ” கேட்ட அவரை பார்த்து சிரித்தேன்.
” வாழ்க்கையில் இருந்துதான் “
” அது சரி. ஆனால் எல்லோருமே இங்கே தானே இருக்கிறோம் ? “
” Outcome தான் காரணம். என்ன தேவை என்பதில் தெளிவாக இருந்தால் .. சரியான கேள்விகள் வரும் “
” ம்ம்ம்ம் “
இருவருக்கும் ஒரே வயது தான். ஆனால் ஒருவரின் கேள்விகள் இன்னொருவருக்கு திருப்பு முனை.
” Throw a Question and Leave the Space. That Question Does the rest ! “
அந்த கேள்வி என்னவாக இருக்கும் என்பதை உங்களின் அனுமானத்திற்கு விடுகிறேன். Comment ல் சந்திப்போம்.



இரு வியாபார நட்புக்களுகிடையே சிறு விவாதம்.
” Values தான் முக்கியம் ” இது ஒருவர்
” Sales தான் முக்கியம் ” இது இன்னொருவர்.
என்னை இருவரும் உள்ளே இழுக்க முயற்சிக்க .. நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்.
” எடுத்த இலக்கை அடைய நிறைய வேலை இருக்கிறது. அதை செய்வது தான் என் வேலை. Value. அதனால் …பிறகு இதைப்பற்றி பேசுவோம் ” என்று சிரித்து கடந்தேன்.
அதுவே பதில் என்று புரிந்தவர்களுக்கு
வாழ்த்துக்கள்
.
வியாபாரத்தில் நேர விரயங்களில் முக்கியமானது ஒன்று இருக்கிறது.
” “சரியை” பேச்சில் செய்ய முயற்சிப்பது தான் அது ! “
செய்தால், செய்து விட்டால், செய்து வெற்றி பெற்றால் .. அதுதானே Permanent பதில். ஏன் பேச வேண்டும் ? ஏன் எனில் பேச்சு எளிது மற்றும் உடன் பதில். செயல் கடினம் மற்றும் நீண்ட கால பதில்.
இந்த மாதிரி விவாத மனப்பான்மை யுடன் வரும் நட்புக்களை / புதிய மனிதர்களை மனதிற்குள் நான் ” நீங்களுமா ? ” என்று கடப்பது உண்டு.
” ‘Do’ – is the Final Mantra. Till then, Its just a Speech “



” Production unit சரியில்லை ஜெய். நிறைய Blame செய்கிறார்கள். ” மற்ற departments தான் சரியில்லை …தாங்கள் சரி ” என்பது போலவே நடந்து கொள்கிறார்கள். ” என்று சொன்ன அந்த General Manager ஐ பார்த்து கேட்டேன் ..
” நீங்கள் இப்போது செய்து கொண்டிருப்பது என்ன ? “
” Mirror is Everywhere. See Your Face First ! “


