நான் எனப்படும் நான் : 149
” Business is a platform that raises your thinking, language and behavior to Next Level “
வியாபாரம் என்றால் என்ன ?
பெரும்பாலான மனிதர்களின் பார்வை – பணம் சம்பாதிக்க பயன்படும் முறை.
மிகக் குறைந்த மனிதர்களின் பார்வை –
என் திறமையின் எல்லை எதுவென்று கண்டுபிடிப்பது !
ஆம். திறமை என்பதை மனித ஆளுமை உணர்ந்து விட்டால், அதற்கு அடுத்த பெரும் உணர்தல் – அதன் முடிவிலித் தன்மையை உணர்தல். அந்த முடிவிலித்தன்மையை கண் முன்னே கொண்டு வருவதை தான் வியாபாரம் செய்கிறது.
அப்படியானால் பணம் சம்பாதிப்பது ?
முடிவிலித்தன்மையின் எல்லையை கண்டுபிடிப்பதற்கான reward தான் பணம்.
இது புரியாதவர்கள் கொஞ்சம் பணம் கிடைத்தவுடன் பெரும் வியாபாரம் செய்து முடித்து விட்டதாக எண்ணி .. தங்களின் திறமைக்கு முற்றுப்புள்ளி வைத்து வீட்டில் அடையும் அவலமும் இங்கே கண் முன்னே நடந்து கொண்டே இருக்கிறது.
டாடா க்களும் ஹோண்டா க்களும் இதனால் தான் ஓய்வது இல்லை. சில கோடிகளை பார்த்ததும் நிறைய மனிதர்கள் ஓய்வதும் இதனால் தான் !
” Search the Infinity side of Skill. If so, Then, till last breath, The Business Life is actively on ! “
இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு ஓரளவு கிடைத்துவிட்டால் போதும் தானே என்று வியாபார அளவை சுருக்கி கொள்வதை விட திறமைக்கு எதிராக செய்யும் ஒரு நிகழ்வு இருக்க முடியாது ! போதும் என்பது வேறு மனநிலை. என் திறமையின் எல்லை என்ன என்பது வேறு மனநிலை ! இரண்டையும் குழப்பிக்கொள்கிறோம் நாம் என்பது தான் சரியான பார்வை.
எனக்கு இவ்வளவு போதும் என்பது ” போதும் ” மனநிலை.
என் திறமையின் எல்லை என்ன என்பது விரிவாக்க மனநிலை.
” போதும் ” மை விட அதிக வருமானம் விரிவாக்கத்தில் கிடைக்கும்போது .. அதை பிறருக்கு உதவிட, பிறரின் திறமையை மேற்கொண்டு வர, பிறரின் கடின காலங்களில் உடன் இருக்க .. புதிய சிந்தனைகளை ஆக்கம் செய்ய .. …என்று பயன்படுத்திவிட்டு .. நாம் எப்போதும் ” போதும் “என்று வாழ்வது தான் தனித்தனியான குழப்பம் அற்ற மனநிலை.
நாம் இதில் எதில் இருக்கிறோம் ?
” Earn infinite Through skills. Live simple. Remaining numbers, can be used to support Needy. That’s Life ! “
துறவி சொன்னார்
” எளிமையாக வாழ் “
இரண்டு வருடம் கழித்து வந்த அந்த மனிதனின் சொன்னான்.
” மிக எளிமையாக மாறிவிட்டேன். “
துறவி கேட்டார்.
” எவ்வளவு உதவி செய்தாய் “
அவன் சொன்னான்.
” நானே எளிமையாக வாழ்வதால் உதவி செய்ய இயலவில்லை “
இப்போது துறவி கேட்டார்
” நீ ஏன் இன்னமும் உயிரோடு இருக்கிறாய் ? “





