நான் எனப்படும் நான் : 156
” The Beliefs We carry about Ourselves are the Prime Designers of Our Life “



அடிக்கடி என்னுள் எழும்பும் ஒரு கேள்வி
” என்னிடம் கடந்த காலத்தில் இருந்து ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் மேற்கொண்டு பயணிக்காத ஒரு திறமை எது ? இப்போது அதை கையில் எடுத்தால் என்ன ? “
இந்தக் கேள்வி என்னுள் இருக்கும் திறமைகளை வெளியே கொண்டு வந்த அளவிற்கு வேறு எந்த கேள்வியும் என் திறமைகளை வெளிக்கொண்டு வந்தது இல்லை ! ஒவ்வொரு முறை இந்தக் கேள்வி கேட்கப்படும்போதும் .. எனக்குள் கிடைக்கும் பதில்களில் என் இன்னொரு புதிய வடிவம் வெளிப்படும்.
எண்கள் என்பது சிறு வயதில் இருந்து எனக்கு மிகப்பிடித்த ஒன்று. அவற்றின் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், சதவீதம், அவற்றை பற்றிய ஒப்பீடு, பார்வை, அவை என்ன சொல்கின்றன, எதை சொல்லாமல் விடுகின்றன ….என்பது வரை மனம் எண்களில் ஒன்றிப்போகும். வரவு செலவு கணக்கினை Teen வயதில் கவனித்து, ஒப்பிட்டு, எங்கே குறைக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்த காலங்கள் உண்டு. ஆனால் ஒரு கட்டத்தில் அவற்றில் இருந்து நான் எப்படியோ விலகி இருக்கிறேன். ஏனோ அவற்றை பற்றிய பார்வைகளை கவனிக்கவில்லை. அல்லது கவனிக்க தோன்றவில்லை. சில வருடங்களுக்கு முன் நான் மேற்சொன்ன கேள்வி என்னுள் ஒலித்த போது இந்த ” எண்களை பற்றிய பார்வையை ” ஏன் நாம் அப்படியே விட்டுவிட்டோம் ” என்று யோசிக்க ஆரம்பித்த பின் .. வாழ்வின் போக்கில் பெரும் மாற்றம். ( Share Market ல் invest செய்ய உதவும் Zenlp Wealth Course என்பது அப்படியான ஒரு கேள்வியில் மீண்டும் வந்திருக்கும் திறமையின் அடையாளம் தான் ! )



” Trial Balance ” சரியாகி விட்டதா ? அப்பா என்னை அப்படி கேட்டபோது ..
” 635 ரூபாய் 45 காசு எங்கோ miss ஆகிறது. பார்த்துக்கொண்டு இருக்கிறேன் ” என்று இருபது வயதில் என்னை இயக்கிய அந்த எண்கள் .. எனக்குள் கொண்டு வந்த Searching Ability தான் இன்றும் Numbers ஐ பற்றிய தேடலை தொடர வைக்கிறது.
நிறுவனங்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தும்போது Accounts side கவனம் வருவதன் ஆரம்பம் இந்த எண்களின் மேல் இருக்கும் பெரும் ஆர்வம்.
ஒரு முறை பயிற்சி வகுப்பில் அந்த நிறுவன வளர்ச்சி வீழ்ச்சி எண்களை வைத்துக்கொண்டு கேள்விகளை வைத்த போது .. நிறுவனர் உட்பட பலரின் முகத்தில் மென் சிரிப்பு. ஏன் எனில் .. வார்த்தைகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடியும், ஆனால் .. எண்களுக்கு நம்மால் பதில் சொல்லவே முடியாது. எண்கள் என்பவை என்ன ? ஒரு Performance ன் குறியீடு அது. வரவு அதிகம் என்பதும் செலவு அதிகம் என்பதும் நம் திறமை சரியாக தவறாக பயன்படுத்தப்படுவதன் அளவுகள். எண்கள் அவற்றை சரியாக சொல்லிவிடும்.



நம் எண்களை நாம் படிக்க ஆரம்பிக்கலாம். அவை நம் திறமையின் அடையாளங்கள். Bank ல் இருப்பது நம் எதிர்கால கடந்தகால திறமையின் Representation – கடனாக இருந்தாலும் சேமிப்பாக இருந்தாலும் !
நிறுவன குடும்ப வரவு செலவுகள் நம் திறமையின் நிகழ்கால பிரதிபலிப்பு.



பயணிப்போம்.


