நான் எனப்படும் நான் : 162
” Past has Treasures. Explore and Re-Ignite those within “



கள்ளக்குறிச்சியில் அதிகாலை walking நடப்பவர்கள் .. ஜெயலட்சுமி ஹோட்டலில் தான் பெரும்பாலும் Coffee யோடு ஆரம்பிக்கும். ( அல்லது விக்ரம் tea stall ல் இருந்து ! ). இன்று அங்கே சென்றிருந்த போது .. காலம் ஆனவர்கள் புகைப்பட வரிசையில் .. எனக்கு தெரிந்த அந்த ஹோட்டல் நிர்வாகத்தின் ஆள் … முகமும் அந்த புகைப்பட வரிசையில் .. இருக்க கொஞ்சம் எனக்குள் அதிர்ந்து
” என்ன ஆச்சு ? “
என்று கேட்க
” அவர் இறந்து 4 வருஷம் ஆச்சு. மாரடைப்பு. வயது 49. நல்லவர். என்ன வாழ்க்கையோ ? “என்றார்.
மனம் கனத்தது. இறப்பு நம் கையில் இல்லை. என் இறப்பை நான் மகிழ்வாகவே எதிர்நோக்குகிறேன். ஆனாலும் பிறர் இறப்பு நம்மை வருத்தம் அடைய செய்வது மிக உண்மை.



நான் படித்த பள்ளியில் தான் இன்று அதிகாலை என்னுடைய Walking. இங்கே புகைப்படத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி கழிப்பறை க்கு பின் இருக்கும் சுவர் பார்த்தவுடன் மனதில் மகிழ் நினைவுகள்.
நான் 5 ஆம் வகுப்பு படிக்கும்போது அந்த சுவர் அங்கே இல்லை. ஏன் ….அந்தப் பள்ளியில் படித்து முடிக்கும் வரையே அந்த சுவர் அங்கே இல்லை. அந்த சுவருக்குப் பின் ஒரு சுடுகாடு உண்டு. அதில் பிணங்கள் புதைக்கப்படும். ( எரிக்கப்பட்டது நினைவில் இல்லை ). ஆசிரியர் வகுப்புகளை எடுக்கும்போது பிணத்தை பார்த்துக்கொண்டே கவனிப்பது பெரும் சிரமமாக இருக்கும்.
ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் முதலில் செல்வது நான் படித்த பள்ளிக்கு. ஒவ்வொரு முறையும் அந்த பகுதியும், ஏதோ ஒரு பிணம் புதைப்பதையும் கவனிக்க முடிந்த போது மனதில் தோன்றிய ஒரு விதை தான் அந்த சுவர்.
தலைமை ஆசிரியர் James அவர்களை சந்தித்து நான் செய்ய விரும்புவதை சொன்ன போது முதலில் அவர் சொன்னது
” பெருமையாய் இருக்கிறது ஜெய். எங்களால் செய்ய முடியாதது அல்ல. ஆனால் இப்படி ஒரு படிக்கும் மாணவனின் பார்வையில் இருந்து பார்க்கவில்லை “
என் முன் பணம் சிறிதும், நட்புக்களிடம் பணம் சிறிதும் பெற்று … அந்த சுவரை கட்டி முடித்த போது … மனதில் பெரும் நிறைவு. James ஆசிரியர் தான் முன்னிலை அந்த சுவர் திறப்பு விழாவிற்கு !
” படித்த பின் பள்ளியை ஞாபகம் வைக்கும் மாணவர்களின் வரிசையில் ஜெய் யும் இருக்கிறார் ” என்று சொன்னது ஆணி அடித்தாற்போல இருக்கிறது.



10 C – வகுப்பு. ஆசிரியர் P. சின்னசாமி. சுருக்கமாக PC. நல்ல உயரம். Police Cut. வேக நாடை. பார்த்தாலே நமக்குள் கொஞ்சம் பயம் வரும். கணக்கு அவ்வளவு அழகாக நடத்துவார். ஒரு முறை கவனித்தால் போதும்.
ஒருமுறை நான் செய்யாத தவறுக்கு என்னை காரணமாக்கி Bench மேலே நிற்க சொன்னார். முதலில் மறுத்தாலும் ஆசிரியர் என்பதால் நின்றேன். அந்த வகுப்பு முடிந்து அவர் சென்ற பின்னும் .. கீழே இறங்கவில்லை. அடுத்த வகுப்பு ஆசிரியர் ( வரலாற்று ஆசிரியர் ) வந்து இறங்க சொன்னபோதும் இறங்க மறுத்தேன். அவர் PC யை அழைக்க .. வந்தவர் …என்னை பார்த்து கேட்டார் ..
” இப்போ என்ன செய்யணும் ? “
” நான் தப்பு செய்யல சார். அவ்ளோ தான் நான் சொல்லணும் ” என்று தையிரியத்தை வரவழைத்து சொன்னேன். ( அப்படி பேசியது அப்போது பள்ளி முழுக்க எதிரொலித்தது ).
” சரி தப்பு தான் உட்கார் ” என்று சொன்ன பின்பு நேரடியாக அவர் கண்களை சந்தித்து விட்டு தான் அமர்ந்தேன்.
மனதில் அப்படி ஒரு இறுக்கம் தளர்ந்த உணர்வு.
” தவறு இல்லை எனில் .. யாராக இருந்தால் என்ன ? ” … என்பது இன்று வந்தது அல்ல. DNA வில் இருந்து வந்தது !


