நான் எனப்படும் நான் : 164
#WhoIsJay #ZenlpWealth
” If we show the ways of Earning, Unnecessary Spending reduces on its own. !”



இன்றைய இளம் தலைமுறை பற்றி பல பார்வைகள் இருந்தாலும், சரியான வழியை காண்பிக்கும் பட்சத்தில் … அது இன்னமுமே அழகான உயரங்களை எட்டும் என்றே தோன்றுகிறது.







” தீபாவளி Purchase லாம் முடித்தாயிற்றா ? “
என்று கேட்டால்
” நல்ல company யில் முதலீடு செய்துட்டேன் Uncle ” என்கிறார்கள்.
” முன்னெல்லாம் Amazon ல் minimum 5000 அளவிற்கு செலவழிப்பேன் Uncle. இப்போதெல்லாம் … தேவையானால் மட்டுமே செலவு. மற்ற நேரங்களில் முதலீடு ” என்று சிரிக்கிறார்கள்.
” ஒரு Jeans 2700 ரூபாய் சொன்னாங்க. அப்படியே முதலீடு செய்துட்டேன். அதில் Earn செய்திட்டு மீண்டும் வந்து வாங்குவேன். இனி எல்லாம் earning கிற்கு பிறகு தான் செலவு ” என்று சொல்லும் அவர்களை ஆச்சர்யமாகவே நான் பார்க்கிறேன்.
செலவை செய்வதை அவர்கள் நிறுத்தவில்லை. ( செலவே செய்யலைன்னா company எப்படி uncle வளரும் ? 
என்கிற சிரிப்பும் அவர்களிடம் இருந்தே வருகிறது !! ). ஆனால் earn செய்து செலவு செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். ஒரு விதத்தில் தன்மான வாழ்வியலின் பரிமாணங்களில் ஒன்று தான் அந்த சிந்தனை !


” இந்த முறை என் College Fee யை நானே கட்டி விடுவேன் uncle ” என்று சொல்லும் அவர்களை பார்க்கும்போது வியப்பும் பெருமையும் ஒன்றாகவே வருகிறது.



நட்பு ஒருவர் ஒரு முறை இளம் தலைமுறையினரின் Dependent மனநிலை பற்றி பேசியபோது நான் சொன்னேன்.
” Google Map எப்படி Operate செய்வது என்பதை மட்டும் அவர்களுக்கு சொன்னால் போதும். இலக்கை அவர்களே அடைவார்கள். Map ஐ நாம் வைத்துக்கொண்டு, அவர்களிடம் Steering ஐ கொடுத்துவிட்டு, Left Right என்று வழி சொல்லிக்கொண்டே இருப்பதை விட, போல, Dependent கொடுமை எதுவும் இல்லை. “
இருவரும் சிரித்தோம் !


