நான் எனப்படும் நான் : 165
” There are times where We stay away from our Shoes and Stay in the Shoes of Parents to Just make them Happy “



ஒரு வார Viral Fever அனுபவம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது என்று எண்ணுகிறேன். எழுந்து நடக்க ஆரம்பித்ததும் அம்மா சொன்ன முதல் வரி …
” Shave பண்ணி .. Dye அடிச்சிட்டு … வா .. பார்க்கவே கடினமா இருக்கு “
எனக்கு Dye க்களில் விருப்பம் இல்லை. என்ன இருக்கிறதோ அது தான் நான் என்று வாழவே எனக்கு பிடிக்கும். ” இதுதான் நான் ” என்பதில் கூடுதல் குறைவு பற்றி எனக்கு கவலைகள் இல்லை. ” இதுதான் நான் ” என்பதே பெரும் கூடுதல் என்கிற பார்வை என்னுடையது. Plus யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளுதல் முதிர்வின் அடையாளம் என்பது என் பார்வை.
ஆனால் அம்மக்களின் உலகம் தனி. நான் இன்னமும் அம்மாவுக்கு மகன் தான். அவளின் ” டேய் Horlicks சாப்பிடறயா ? ” பிள்ளை தான். ” குளிச்சிட்டு வா … சாப்பிடலாம் ” பையன் தான். ” போதும் தூங்கு. உடம்பை பார்த்துக்கணும் ” சிறுவன் தான். அதில் இன்னொன்று தான் ” Dyeing “. செய்து முடித்து வந்து நின்றால் … ” அப்பா ….இப்பதான் முகம் பழைய மாதிரி இருக்கு ” என்று சிரிக்கிறாள். மீட்பவளுக்கு தானே இந்த முகத்தின் அருமை புரியும் !
இந்த மீட்டலில் Kirthika Tharan ன் இன்று வரை கவனிப்பும், Anuthama Radhakrishnan Shankara Narayanan ன் பங்கும் முக்கியமான ஒன்று. கீர்த்தி அனுப்பிய அந்த நபரின் முதல் மூன்று நாட்கள் உதவி மிக முக்கியமான ஒன்று. முதலில் நான் மறுத்தாலும் … பின்னர் அவரின் Expertise பார்த்தவுடன் ஆச்சர்யம் அடைந்தது உண்மை.
Anu அனைத்து வகுப்புகளையும் Cancel செய்து, என்னை முழு ஓய்வுக்கு அனுப்பினார். ( வரிசையாக இருக்கும் Programs ஐ மாற்றி மீண்டும் ஓரிடத்தில் அனைத்தையும் சேர்ப்பது அவ்வளவு எளிது அல்ல ! ) Shankar கோவையில் இருந்து இதற்காகவே வந்து வீட்டில் என்னை Drop செய்து விட்டு மீண்டும் கோவை சென்றார்.
( இந்த முறை சேலத்தில் முதல் மூன்று நாட்கள் Viral Fever ல் இருந்த போது எனக்கு உடன் இருந்து உதவிய நபர்களை பற்றி எழுத வேண்டும். அவர்களுடன் புகைப்படம் எடுத்து எழுதுகிறேன் ). கடின காலங்களில் மனிதர்களின் ஆறுதல் மருத்துவமனைகளோ, மாத்திரைகளோ அல்ல. மனிதர்கள். ஆம். மனிதர்கள் மட்டுமே. அவர்களைப் பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள். நான் வரம் பெற்று இருக்க வேண்டும்.
மீட்டுக் கொடுப்பவர்கள் அனைவரும் மீட்பர்கள் தான். மனிதம் மீட்பவர்கள்.
” The Holding Fingers are the Reality. It leads with care when You are even unable to walk “



அநேகமாக இன்று ஒரு நாள் மாத்திரைகள் அற்ற ஓய்வும், நாளை முதல் வழக்கமான commitment உடன் என் வாழ்க்கை தொடங்கி விடும். மக்களை சந்திக்க இருப்பதில் தான் எவ்வளவு மகிழ்வு மனதிற்குள் !
” When you are with People, You live in an another World on Earth “


