நான் எனப்படும் நான் : 166
” Reading Books – One Birth won’t be enough “



இறப்பதற்குள் அனைத்து புத்தகங்களையும் படித்து விட வேண்டும் என்கிற தீரா ஆசை மட்டும் … நீரே இல்லை எனினும் வளரும் செடி போல வளர்ந்து கொண்டே இருக்கிறது. சமீபத்திய புத்தக வாசிப்பு மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான். ” இன்னமும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது “
” ‘தனி மனிதர்கள் வரலாறுகளை உருவாக்குவதில்லை. வரலாறுகள் தான் தனி மனிதர்களை உருவாக்குகின்றன ‘ என்கிற அந்த வரிகள் மனதிற்குள் மீண்டும் மீண்டும் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. ஜோதிபாசு பற்றி படிக்க படிக்க ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு தலைவரை இந்த நாடு முழுமையாக சுவாசித்து இருக்கிறது. இரு வரிகள் தான் ! ஆனால் எவ்வளவு ஆழம் பொதிந்தவை !! தனி மனிதர்கள் வரலாறுகளை உருவாக்குவதாக நினைத்து அழிவது தான் வரலாறு. உலகம் முழுக்க பல தற்குறிகளை இதற்கு உதாரணமாக காணலாம். ஆனால் வரலாறு உருவாக்கும் தனி மனிதர்கள் .. காலம் முழுக்க வாழ்கிறார்கள். தனித்துவமாய் !
மதுரைக்கு எப்போது சென்றாலும் .. தங்க ரீகல் தியேட்டர் முன் எனக்கான பழைய புத்தக கடை ஒன்று காத்துக்கொண்டே இருக்கும்.
” வாங்க சார். எங்க ரொம்ப நாளா ஆளக் காணோம் ? “
சிரித்துக்கொண்டே கேட்ட பழைய புத்தக கடைக்காரரின் சிரிப்பு எனக்குள்ளும் தொற்றிக்கொண்டது.
” வேலை வேலை வேலை ” என்று சிரித்தேன்.
” இந்தாங்க ” என்று ஜோதிபாசுவை அவர் தான் கொடுத்தார்.
” உங்களுக்கு பிடிக்கும் “
பழைய புத்தக கடைக்காரர்களுக்கு நம் ரசனை எப்படியோ புரிந்து போகிறது !
புத்தகத்தை பிரித்து பார்த்துக்கொண்டு இருந்த போது சொன்னார் ….
” படிக்க படிக்க உள்ளே என்னவோ செய்யும் “
பெரும்பாலான பழைய புத்தகக் கடைக்காரர்கள் புத்தகங்களை படித்தவர்கள். அவர்களுக்கு உலக நடப்புகள் நன்றாகவே தெரியும். சாலை ஓரங்களில் இருந்தாலும் .. சகல அனுபவங்களையும் படிப்பவர்கள் அவர்கள்.
தமிழக முதல் அமைச்சர் திரு – M. K. Stalin அவர்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
” ஏன் இந்த பழைய புத்தகக் கடை உரிமையாளர்களுக்கு என்று அரசாங்கம் சில குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கிக் கொடுக்க கூடாது ? ஏன் அவர்களுக்கு அரசாங்க விழாக்களில் இடம் கொடுத்து விற்பனையை இன்னமும் ஊக்குவிக்க கூடாது ? “
ஜோதிபாசு – வின் புத்தகம் Just 60 ரூபாய்க்கு கிடைக்கிறது. பல ஆளுமைகளின் புத்தகங்களும் அப்படித்தான் சாதாரண விலையில் கிடைக்கின்றன. பழைய புத்தக கடைக்காரர்கள் சமூகத்திற்கு பெரும் சேவை இது. இந்த புத்தகங்கள் தனி மனித சிந்தனையில் ஏற்படுத்தும் மாற்றம் மிகப் பெரிய ஒன்றாக இருக்கக்கூடும். அப்படியான புத்தகங்களை விற்கும் மனிதர்களுக்கு வாழ்வியல் இடம் கொடுக்க தமிழக அரசு நினைக்கும் எனில் … அநேகமாக உலகிலேயே பழைய புத்தக கடைக்காரர்களுக்கு மரியாதை செய்யும் முதல் அரசாக தமிழை அரசாங்கம் இருக்க கூடும்.