நான் எனப்படும் நான் : 170
” Father is not a Position but A Role Modeling on the Move ! “





சமீபத்தில் மகனுடன் மகளுடன் இருந்த பயண நிமிடங்கள் எவ்வளவு ? இந்த கேள்வியை மீண்டும் இந்த Article ன் கடைசியில் கேட்கும்போது அர்த்தம் அநேகமாக வேறாக இருக்கக்கூடும் !



அந்தப் பயணம் மகனின் கேள்வியுடன் ஆரம்பித்தது. ” இந்த இடத்திற்கு செல்ல வேண்டும். எப்போது செல்லலாம் “. நேரம் இருப்பதால் கொஞ்சமும் யோசிக்காமல் ” போகலாம் ” என்று சொன்ன தந்தை … என்று அந்த பயணம் அழகாய் ஆரம்பித்தது. வழி நெடுகிலும் கேள்விகள் பதில்கள் .. மீண்டும் கேள்விகள் பதில்கள் .. என்று தந்தையும் மகனும் தங்களை புதுப்பிக்க .. அந்த பயணம் ஒன்றை மட்டும் கண்டுகொண்டே இருந்தது. அது .. மகனின் முகத்தில் நிலையாய் இருந்த சிரிப்பு ! தங்களை புரிந்து கொள்ளும் அப்பாக்கள் அருகில் இருந்தால் மகன்களின் முகத்தில் தெரியும் ஒரு அசாத்திய சிரிப்பு பெரும் வரம் !
” Just By understanding Son, A Father Relaxes him …. Completely ! “



அது ஓர் அழகான தரை அளவு அணை. அங்கே குதித்து குளிக்கவும் முடியும். நிதானமாய் அமர்ந்து குளிக்கவும் முடியும். அப்படி இரு வாய்ப்புகள் உள்ள ஓர் இடம். என்ன .. மிக கவனமாக நடக்க வேண்டும் ! தந்தை முன்னேற மகன் அவரின் கால் தடங்களை கவனித்து பின்னேற .. வாழ்வின் ” கண் முன் தெரியும் பாடம் ” அங்கே தன்னை தானாகவே அவிழ்த்துக் கொண்டது.
ஒவ்வொரு தந்தையும் தன் Characters ஐ முன்னே வைத்து முன்னேற மகன் அந்த Characters ஐ benchmark ஆக வைத்து .. முன்னேறுவது தான் இங்கே நடந்துகொண்டே இருக்கிறது ! ” ஏமாற்ற வாய்ப்பு இருக்கும்போது ” – என் தந்தையாக இருந்தால் இங்கே என்ன செய்திருப்பார் – அப்படி எனக்கு அந்தப் பணம் வேண்டாம் ” என்று மனதில் இருத்தி வெளியே வேண்டாம் என்று சொல்வது இப்படித்தான் ! மகன்களின் முடிவில் அப்பாக்கள் எப்போதும் அழகாகவே வெளி தெரியாது பயணிக்கிறார்கள் !
நல்ல தந்தைகளின் மகன்கள் தவறு செய்கிறார்களே ? என்று கேட்பவர்களுக்கு .. அங்கும் தந்தை தான் Benchmark ! ” நான் செய்வது என் தந்தைக்கு தெரிந்தால் ” என்பதில் தான் பயமும், தன்னை திருத்திக்கொள்ளும் வாய்ப்பும் வருகிறது ! ஆம். அங்கும் அவரே Benchmark !
சில தந்தைகள் தவறாக இருக்கிறார்களே ? ஆம். அங்கும் அவர்களே Benchmark ! மகன் எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதை தந்தை தன் வாழ்க்கை மூலம் தெரிவித்து விடுகிறார்.
” You be a Benchmark or Either for a Good Standards or Be a Benchmark for Bad Standards ! “



” குளிக்கவா ? ” மகன் கேட்க
” வேண்டாம். ஏற்கெனவே உனக்கு Cold ” அப்பா சொல்ல மகன் கேட்டுக்கொள்கிறார். அப்பாக்கள் எப்போதும் எதிர்காலத்தை கண்ணில் வைத்தே மகன்களிடம் பேசுகிறார்கள். மகன்கள் நிகழ்காலத்தில் அதை வாங்கும்போது எதிர்கால அறிவு புரிவது இல்லை. அப்பாக்கள் சொல்லும் பாடங்கள் மீண்டும் மீண்டும் எதிர்காலத்தில் சரியாகிக்கொண்டே வருகின்றன.
” அப்பா அப்பவே சொன்னார் ” என்கிற வரியை சொல்லாத மகன்கள் மகள்கள் இருக்கவே முடியாது !
” The one Foresees seriously today, will be taken seriously only in Future ! Harsh Reality ! “



” Happy ” யா இருக்கியா ? அப்பா கேட்க
” Very Much ” என்று மகன் சிரிக்க ….அந்த இடம் மகிழ்வால் நிரம்புகிறது !
மகன்களிடம் கடைசியாக ” Happy யா இருக்கியா ? ” என்று நீங்கள் கேட்டது எப்போது ?
அப்படி கேட்டு .. நீண்ட காலம் ஆகிவிட்டது எனில் .. இங்கே முதலில் கேட்ட கேள்வியை மீண்டும் வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது.
ஆம்.
” சமீபத்தில் மகனுடன் மகளுடன் இருந்த பயண நிமிடங்கள் எவ்வளவு ? “
யோசிப்போம். பயணிப்போம்.


