நான் எனப்படும் நான் : 176
” A Book and A Lonely Train Journey – brings Next level PEACE within “
என் ஆரம்ப காலத்தின் பயிற்சியாளர் வாழ்க்கையின் பெரும்பாலான நாட்கள் … இரயில் பயணங்களில் அழகாக கழிந்திருக்கின்றன. இந்தியா முழுக்க / ரயிலில் / என் வாகனத்தில் / விமானத்தில் பயணித்திருக்கிறேன். இந்த பயணங்களில் மிக மிக மனதிற்கு நெருக்கமானது இரயில் பயணம் மட்டுமே. என் வாகனப் பயணம் சுகமானது. ஆனால் மனதிற்கு மிக நெருக்கமானது இரயில் பயணம். ஏன் அப்படி ?
இப்படி பல புத்தகங்களை இரயில் பயணங்களில் படித்திருக்கிறேன். பசித்திருக்கிறேன். இரவெல்லாம் படிக்க வேண்டுமே என்பதற்காக யாரும் அற்ற இடங்களில் என் இருக்கையை மாற்றிக்கொள்வது / விளக்கு சரியாக இருக்கிறதா என்று check செய்வது …என்று ஒரு பரபரப்பு என்னுள் இருந்த காலங்கள் அவை !
அப்படி டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்வதற்குள் படித்து ருசித்த புத்தகம் தான் The Alchemist ! அந்த புத்தகத்தை நான் முடித்த போது …என்னுள் இருந்து நான் விடுபட்ட உணர்வு. அப்படி ஒரு உணர்வை வேறு புத்தகங்களில் நான் பெறவில்லை ! அந்த புத்தகம் படித்த Riyas Mohamed Ali சமீபத்தில் ஒரு காணொளியை பகிர்ந்த போது எனக்கு டெல்லி அகமதாபாத் பயணமும் அப்போது கிடைத்த அந்த விடுபட்ட உணர்வும் … மீண்டும் ஞாபகத்தில் !
” After Completing a Book, it starts its inner Journey within us – Unconsciously “
படுத்துக்கொண்டு படிப்பது ஒரு சுகம் என்றால் … அமர்ந்து படிப்பது மற்றோர் சுகம். புத்தகத்தை எதிரே இருக்கும் stand ல் அவ்வப்போது வைத்துவிட்டு .. சாளரம் பார்க்கும் சுகம் மிக மிக ஏகாந்தமான ஒன்று. அதிலும் சாளரம் வழி வரும் தூறல் கலந்த காற்றும், நகரும் முடிக்கற்றையும் … தனி மனித Max மகிழ் கணங்கள்.
” Seeing through a Fixed Window of a Moving Train .. is an Available Blessing “
இப்போது படிக்கும் ஒரு புத்தகம் எனக்குள் புதிய பார்வையை கொண்டு வரும் ஒன்று. ” அட .. ” என்று மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கும் அந்த புத்தகத்தை கவனிக்கிறேன். எழுதியவருக்கு எம் மனம் நிறை நன்றிகள். ஒரு முறை எழுதிவிட்டு படிக்கும் கோடானு கோடி மனங்களை மாற்ற முடியும் எனில் .. ஒவ்வொரு எழுத்தாளரும் இறைவன் / இறைவி தான் ! எங்கோ இருப்பதாக சொல்லும் இறைவனை தேடுவதை விட இங்கே இருக்கும் நல்ல எண்ணத்தை ஆழ் மனதில் கொண்டு வரும் எழுத்தாளர்களின் இறைத் தன்மையை மனம் ஆற வாழ்த்தலாம்.
வாழ்த்துவோம்.
March 2 ஆம் தேதி Chennai Book Fair க்கு செல்லத்தான் இந்த பயணம். அங்கே புத்தகங்களை சந்திக்க ஆவலாக பயணிக்கிறேன் – எனக்கு பிடித்த இரயில் பயணத்துடன் !
” When We finish a book, We open a New Life “





