நான் எனப்படும் நான் : 185
” Real Life is … Somewhere very Near to us. “



நடந்து கொண்டு இருக்கும்போது அவரை கவனித்தேன். கொஞ்சம் வயதானவர். மெதுவாக நடந்து கொண்டு இருந்தார். மூச்சு வாங்கினாலும் சிரித்த முகத்துடன் … நடந்து கொண்டிருந்த அவரிடம் கேட்டேன் …
” எப்படி உங்களால் நடக்க முடிகிறது ? “
” இந்த உடல் இருக்கே … ” மூச்சு மேலும் வாங்கியது. ” அது ஒரு வித்தியாசமான Machine. Use செய்தா நீண்ட நாள் உழைக்கும். Use செய்யலேன்னா … உடனே repair ஆகிடும். “
அமைதியாக அவரை பார்த்தால் …. இன்னொன்றை சொன்னார்
” வாழ்க்கை நம்மை வாழவே சொல்கிறது. “
இடம் – Race Course – Coimbatore



அந்த சிறுவன் கேட்டான் …
” மழை ஏன் எப்போவாவது பெய்கிறது ? “
” தெரியலையே “
” எப்பவுமே பேஞ்சா நல்லா இருக்கும் ல “
” ஆமா “
கொஞ்ச நேரத்தில் அந்த சிறுவன் சொன்னான்
” இல்ல எப்பவும் பேஞ்சால் .. சரியா இருக்காது. அப்பப்ப வரணும் போகணும். அதுதான் சரி “
இடம் ; பிள்ளையார் கோவில், கொப்பனாபட்டி



” எனக்கென்னவோ அவர் செத்துப் போனது கூட வலியா தெரியல .. ஏன் என்னை இப்படி விட்டுட்டு போனார் ? எனக்குன்னு எதுவும் தெரியல. வீட்டுக்குள்ளேயே இருந்துட்டேன். அதுதான் வலிக்குது “
நான் அமைதியாக இருந்தேன்.
” என்ன வேணா நடக்குன்னு எனக்கு தெரியல. அவருக்கும் தெரியாது. அப்படீன்னா .. என்னை தயார் படுத்தி இருக்கணும் தானே ? அவரை விடுங்க எனக்கு எங்கே போச்சு புத்தி ? “
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு …
” என்னை நான் சரி பண்ணனும். நான் எழுந்து வரணும். அதுக்கு நான் என்ன பண்ணனும் ? “
இடம் – உறவின் இறப்புக்கு பின் சோர்வாக இருக்கும் வீடு.



அருகில் தான் இருக்கிறது வாழ்க்கை. நம்மிடம் ஒவ்வொரு நாளும் பேச முயற்சித்து கொண்டே இருக்கிறது.
நாம் கவனிக்கிறோமா ? என்பது தான் பெரும் கேள்வி.


