நான் எனப்படும் நான் : 189
” Long Drives are not just drives. With Favourite songs and audio files, They refresh and rejuvenate the existing Learning “



ஓடிக்கொண்டே இருப்பது மீண்டும் ஆரம்பிக்கிறது. அதாவது Covid க்கு பின் மீண்டும் நீண்ட தூர Business Drives கண்ணுக்கு எதிரே. இந்த நீண்ட தூர பயணங்கள் எனக்கு மிக நெருக்கமானவை. இங்கே …
* எனக்கான பாடல்கள்
* எனக்கான Audio Files
* நான் படிக்க வேண்டிய விடயங்கள் ஒலி வடிவில்
* புகைப்படம்
* எழுத்து / புத்தக வாசிப்பு
( இன்றைய 600 Kms Drive க்கு இடையே 250 பக்க புத்தகம் ஒன்றையும் முடிக்கவிருக்கிறேன் )
* நீண்ட காலமாக காத்திருக்கும் நட்பு க்களுடனான Calls
* எம் தொழில் சார்ந்த புதிய சிந்தனைகள் ( Training ஐ ஏன் இந்த மாதிரி செய்யக்கூடாது ? )
…
என்று கிட்டத்தட்ட என் Car ன் உள் பகுதி … ஒரு Mini நகரும் அறையாக /அலுவலகமாக / ஓய்வு முறையாக / படிப்பகமாக மாறிவிடுகிறது.
இவ்வளவும் எந்த விதத்திலும் Driving ஐ Disturb செய்வது இல்லை. மாறாக Driving ஐ இன்னமும் அழகாக உயிர்ப்பாக ரசனை உள்ளதாக மாற்றுகிறது !
” Movement is nothing but a Choice to Learn while Moving as well “



NH புகைப்பட ஆர்வத்திற்கு சாபம். ஆனால் ஆழமான சிந்தனைகளுக்கு வரம். கருப்பு நேர்கோடாய் கண்ணில் சாலை தெரிய …மிதமான வேகத்தில் …” இப்படி செய்தால் என்ன ? ” என்கிற சிந்தனை அங்கே மேலோங்கும். பிடித்த பாடல்களும் சேர .. கண்ணாடிக்கு வெளியே இருக்கும் உலகம் கிட்டத்தட்ட மறந்தே போகும்.
ஒற்றை அல்லது இரட்டை வழி சாலைகள் புகைப்பட ஆர்வத்திற்கு பெரும் தீனி. ஆங்காங்கே நிறுத்தி Camera விற்கு விடுதலை கொடுத்தால் ..அங்கே இருக்கும் காட்சிகளை அது சுவாசித்துக்கொண்டே இருக்கிறது.
Push Back ஒரு அட்டகாச Option. Seat ஐ சாய்த்துவிட்டு தூங்கினால் அப்படி ஓரு சுகம். என்னுடன் எப்போதும் பயணிக்கும் தலையணை உடனே வந்து ஆறுதல் சொல்ல .. அயர்வது நொடிகளில் நடக்கும்.
சாலையோரமாக நிறுத்தி விட்டு, Car க்குள் அமர்ந்து புத்தகம் வாசிப்பது கிட்டத்தட்ட ஒரு தனி அறைக்குள் இருந்து வாசிக்கும் அழகுக்கு இணை. கண்ணாடிக்கு வெளியே உலகம் மௌனமாக இயங்க .. கண்ணாடிக்கு உள்ளே மனம் வேகமாக இயங்கும் – கண் வழியே தெரியும் புத்தக பாடங்களால் !
இன்று இந்த நீள் பயணத்தில் படிக்கவிருக்கும் புத்தக வாசிப்பின் Extract ஐ ஆங்காங்கே பதிகிறேன். உங்களுக்கும் உபயோகப்படலாம்.
இனி எதற்கும் நேரம் கொடுப்பது என்பது மிக மிக கடினமான ஒன்றாகவே இருக்கும். வாழ்க்கை அப்படித்தான். நம்மை சரி செய்ய சரி செய்ய நம்மை அது Busy ஆக்கிக்கொண்டே இருக்கும்.
” Time is not a choice. Its a parallel running machine. Either use it or become useless – is its constant voice ! “



பயணிப்போம்.


