படம் சொல்லும் பாடம் – 067
#படமும்பாடமும் ; 007 /100 / 2023 ; Netflix
” வென்று கொண்டே இருக்கும் போர் என்று எதுவும் இல்லை “
Hitler ன் தோல்வி ஆரம்பமாகும் இடத்தில் நடக்கும் கதை தான் படம். Norway ன் இரும்புத்தாது கிடைத்தால் Germany போர்த்தளவாடங்கள் செய்து வெற்றியை எளிதாக பெற முடியும். அதைக் கிடைக்காமல் செய்ய French English படைகள் போரிட / Norway நடுநிலையாக இருக்க வேண்டிய கட்டம். அங்கே நடக்கும் கதை தான் படம்.
கணவன் மனைவி குழந்தை என்கிற குடும்பம். Norway நாட்டின் போர்வீரன் கணவன். மனைவி Cafe Iris ல் வேலை செய்யும் பெண்மணி. என்ன நடக்கிறது இவர்களின் வாழ்விற்குள் – இந்தப் போரால் ? என்பதோடு கதை அழகாகப் பயணிக்கிறது. Norway ன் அழகிய பனி மலைப் பக்கங்கள் – கண்ணுக்கு குளிர்ந்த அழகு.
நாடா குழந்தையா என்றால் – குழந்தையே என்னும் முடிவை எடுக்கும் தாய் – அதை முதலில் புரிந்து கொள்ளாத பின் புரிந்துகொள்ளும் தந்தை என்று போருக்கு பல பக்கங்கள் உண்டு.
மெதுவாக ….தேனில் பலாச்சுளை விழுந்து உள்ளே அமிழ்வது மாதிரியான காட்சி அமைப்பு. பெரிய பாதிப்புகள் எல்லாம் இல்லாத ஆனால் எதையோ உணர்த்தும் போர்ப் படம்.


