படம் சொல்லும் பாடம் – 069
#படமும்பாடமும் ; 009 / 100 / 2023
” Love has many dimensions. One such is Sacrificing & Still Keeping Quiet “



உளவாளிகள் காதலிக்க முடியுமா ? அப்படியே காதலித்தாலும் … அதில் உண்மையாக இருக்க முடியுமா ? அவ்வளவு தான் கதை. சண்டை இல்லை. கொலை இல்லை. பரபர என்னும் Heroic Action Sequences இல்லை. ஆனால் படம் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை Thriller !
ஒரு விமானம் கடத்தப்படுகிறது. அவ்வளவு தான். அங்கே இருந்து … காட்சிகள் முடிச்சு முடிச்சாக அவிழ்கின்றன. Editing என்றால் என்ன என்று தீர்க்கமான பாடத்தை படம் நடத்துகிறது. ஆண் பெண் உளவாளி க்கு இடையே இருக்கும் காட்சிகள் – மிகச் சிலவே. ஆனால் நமக்குள் ஆழமான பாதிப்பை அவை ஏற்படுத்துகின்றன !
கடைசி காட்சி வரை ஒவ்வொரு Frame இலும் ஒவ்வொருவர் வில்லனாகி, மீண்டும் Hero வாக மாறுகிறார். வாழ்க்கையின் முகம் தான் எவ்வளவு வித்தியாசமான ஒன்று ! ?
ஆண் உளவாளியின் கண்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன. பெண் உளவாளியின் சிரிப்பும் அழுகையும் பேசுகிறது. என்ன ஒரு நடிப்பு ! யார் யாரை ஏமாற்றுவது ? யாருக்கு யார் கில்லாடி ? உளவு என்பதன் அர்த்தம் உளவுத்துறைக்கு வெளியே மட்டுமா ? உள்ளேயே இல்லையா ? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள்.
கொஞ்சம் யோசித்தால் .. இந்த உளவு வாழ்க்கையே ஒரு Thriller வாழ்க்கை தான் போலே. முடிவில் இரண்டே இரண்டு தான் இருக்கும். 1. உயிரோடு இருப்பாய். 2. உயிரோடு இருக்க மாட்டாய். இப்படியான வாழ்க்கையை வாழ்பவர்கள் …உண்மையான Hero Heroine கள். என்ன ? ஒளிந்து தான் அவர்கள் வாழவேண்டும் – ஒளி படைத்த கண்களுடன் !





