படம் சொல்லும் பாடம் – 075
#படமும்பாடமும்: 15 / 100 / 2023
” A door opened and I went through it “



உங்கள் குழந்தைக்கு Autism இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் நீங்கள் Parent எனில் இந்தப் படம் பார்க்கவேண்டும். Parents Related Profession ல் இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.



குழந்தைகளை நம் வாழ்வியலுக்கு கொண்டு வர முயற்சிப்பது தான் நம்மில் பலருக்கு இருக்கும் பெரும் பிரச்சினை ! அவர்களின் வாழ்வியலை கண்டுபிடிக்க நாம் முயல்வதே இல்லை. மாறாக .. இங்கே இருக்கும் உலக வழக்கங்களை அவர்களின் மேல் கொட்ட முயல்வது தான் நாம் அவர்களின் திறமைக்கு செய்யும் பெரும் துரோகம்.
ஒரே ஒரு ஆசிரியர் போதும் …
” உனக்கான கதவு அது. திறந்தால் இன்னொரு உலகம் திறக்கும் “
என்னும் ஒரு வரியில் ஒரு திறமையை அவரால் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடிகிறது – அவர் இறந்த பின்னும் !



இங்கே நடிப்பவர்கள் எல்லாம் நடிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இருக்க, ஒருவர் வாழ்வியல் தான் நடிப்பு என்று நமக்கு சொல்லிக்கொடுக்கிறார். என்ன ஒரு பேச்சு, செயல், சிந்தனை, வேகம், புத்திக் கூர்மை, புரிதல், கோபம், சிரிப்பு, பெருமிதம், உணர்வு, எரிச்சல், ஒவ்வாமை … எனக்கு தெரிந்து ஒரே நடிகை மேற்சொன்ன அத்தனையையும் ஒரே படத்தில் கொண்டு வந்திருக்க முடியும் எனில் .. அது Claire Danes அவர்களால் மட்டுமே முடியும். படம் முடிந்த போது எழுந்து நின்று கை தட்டியது தான் அவரின் திறமைக்கும், அவரை அப்படி நடிக்க வைக்க inspire செய்த .. Temple Granding க்குமான எம் தூர தேசத்து Virtual மரியாதை !



விலங்குகள் அவளை புரிந்து கொள்கின்றன. அவள் விலங்குகளை புரிந்து கொள்கிறாள். மனிதர்களுக்கு மட்டும் அவள் ” Abnormal அல்லது Autistic “
” உங்களுக்கு எப்படி சரியானது ? “
என்கிற கேள்விக்கு
” எனக்கு எதுவும் சரியாகவில்லை. நான் இன்னமும் / கடைசி வரை Autistic தான் ” என்று சொல்லும் அழகும், துணிச்சலும், உண்மையை உரக்க சொல்லும் வீரமும் … என்ன ஓர் பார்வை !
கடைசி 10 நிமிடங்களை நீங்கள் பார்க்கும்போது உங்களை அறியாமல் இருமுறை அல்லது அதற்கும் மேலே நீங்கள் கை தட்டக் கூடும். அது அவருக்கு கிடைக்கும் மரியாதை இல்லை. நமக்கு நம்மை புரியவைத்த திறமைக்கு கொடுக்கும் அங்கீகாரம்.
Visual ஆக யோசிக்கும் ஒருவருக்கு, Auditory யில் உலகை கவனிக்கும் ஒருவரை Room Mate ஆக ஆக்கி இருப்பதில் இருக்கிறது கதையின் வெற்றி ! இரு Plus கள் புதிய Plus ஆக மாறும் என்பது எழுதப்பட வேண்டிய விதி.





