படம் சொல்லும் பாடம் – 076 & 77
#படமும்பாடமும் ; 16 & 17 / 100 / 2023



” Legacy is all about Downloading Aggression & Experience “



Sylvester Stalone எனக்கு என்னுடைய Teen age நாட்களின் நாயகன். இன்னமும் சரியாக சொன்னால் பெரும் Inspiration. அவரின் Rocky படம் – பலரின் கனவுப் படம். அந்தக் கனவுப் படத்தில் இருக்கும் ஒரு காட்சி தான் Creed என்கிற இந்த Sequence ன் வேர். படம் இருக்கட்டும். கதை இருக்கட்டும். அதை விட சில விடயங்களை இங்கே கவனிக்க வேண்டியது இருக்கிறது.
முதலில் Sylvester ஐ பார்க்கும்போது மனதிற்கு கடினமாக இருக்கிறது. இளம் வயதில் பெரும் Heroic ஆக இருந்த ஒரு ஆளுமை – மெதுவாக தன் உடலை சாய்த்து நடப்பது, மெதுவாக பேசுவது, பேசுவதற்கு முன் வார்த்தையை தொண்டை வரை கொண்டுவந்து பின் விழுங்கி அமைதியாக ஆவது … என்று கண்ணுக்கு முன்னேயே நாம் ஒரு காலத்தில் கொண்டாடிய ஆளுமை தடுமாறுவதை கவனிக்கும் போது … கொஞ்சம் வலிப்பது உண்மை. ( Character க்காக நடிப்பது என்றாலும் வயது அவரை அவரின் யதார்த்தத்தை சொல்வது உண்மை ! ) 1976 ல் ஆரம்பித்த நடிப்பு 2018 வரை தொடரும் என்றால் …. 42 வருடங்கள் Plus ல் ஒரு ரசிகராக கவனித்தால் Sylvester ஒரு பெரிய ஆளுமை. தன் வாழ்நாளிலேயே இளம் வயது Hero வை வயதான ஆளுமையாக பார்ப்பது எல்லாம் ஒரு சில நடிகருக்கு தான் வாய்க்கும். அப்படியான ஒருவர் தான் Sylvester.
” இனி உன் நேரம் ” என்று Michael Jordan ன் Sylvester சொல்லும் – இடத்தில் – இந்தப் படத்தின் அச்சு மாறுகிறது. அநேகமாக Creed 3 வந்தால் Sylvester இருக்க வாய்ப்பில்லை. Michael Jordan மிக சிறப்பாக உழைத்திருக்கிறார் என்பது தான் அவரின் நடிப்பிற்கான ஒரே வரி.
குத்துச்சண்டை காட்சிகளை பல படங்களில் பார்த்தாலும் .. இதில் இருக்கும் ஒரு Elite Touch நிச்சயம் அழகு. படம் முழுக்க Action என்று வந்தாலும் கூட அழகான குடும்பம், அம்மாவின் பார்வை, காது கேளாத மனைவி, குழந்தை, Coaches .. என்று பல கிளைகளாக நிறைய அழகுப் பார்வைகள்.
Rocky பார்த்திருந்தால் இந்தப் படத்தின் வலி இன்னமும் புரியும். ஒருவேளை Rocky பார்க்கவில்லை எனில் அந்த Sequence ஐ பார்த்துவிட்டு Creed பார்க்கலாம். Part 1 Part 2 என்று இருந்தாலும் Part 2 மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது.





