படம் சொல்லும் பாடம் – 088
#படம்சொல்லும்பாடம் ; 88
” சாதி, மதம், மேலோன், கீழோன், பணக்காரன், ஏழை … அனைத்தையும் ஒரு விளையாட்டு – சரி செய்யும் என்றால் அது தான் தேசிய விளையாட்டாக இருக்க வேண்டும் “



தமிழ்ப் படங்களை பிடித்திருக்கும் ” குறி வச்சா இரை விழணும் ” Punch Dialogue வியாதி கொஞ்சம் கொஞ்சமாக ஒழிந்து கொண்டே இருக்கிறது என்று Collar Bone வரை திமிர் கொண்டு சொல்லலாம். அதே போல … தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர் என்றால் அந்த வரிசையில் தினேஷ் வருகிறார். விசாரணையில் – தன்னை ” பார்த்துக்கங்க மக்களே ” என்று சொன்ன அந்த நடிகன் இந்தப் படத்தில் ஒவ்வொரு முறையும் … பேசாமல் கண்ணில் காட்டும் ஒவ்வொரு உணர்வையும் – எந்த திரைப்படக் கல்லூரியும் சொல்லிக் கொடுக்க போவது இல்லை ! சொல்லிக் கொடுக்கவும் முடியாது !! மனைவியிடம் அப்படியே ஒடுங்கும் தினேஷ், பெண்ணிடம் அப்பாவாக பாசத்துடன் பணியும் தினேஷ், Ground ல் கால்களில் Pad உடன் வந்து தடுமாறும் முகமும், அதே Ground ற்கு Pad இல்லாமல் வந்து ஆடும் அழகும் … இவ்வளவு Variety யான நடிகரை இன்னமும் உயரத்துக்கு கொண்டு செல்லும் … Characters ஐ கொடுக்க இயக்குனர்கள் இந்நேரம் Plan செய்து கொண்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
அவருக்கான Equal Role தான் மாப்பிள்ளை கதாநாயக role. அசத்தி இருக்கிறார் Harish Kalyan. வாழ்த்துக்கள். ஆனால் .. Dinesh ஐ Compare செய்தால் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது இருக்கிறது. மனதில் வைத்துக்கொள்ளலாம்.



ஒரு character கூட வீண் என்று சொல்லவே முடியாத அளவிற்கு செதுக்கி இருக்கும் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து விற்கு மனம் நிறை மகிழ் நன்றி. இப்படி படங்களில் ஆங்காங்கே கொடுக்கப்படும் பாடங்கள் தான் வாழ்க்கைக்கு அடிப்படை.
” தம்பி மாதிரி ” க்கும் தம்பிக்கும் … உள்ள வித்தியாசம்,
வெற்றிக்கு திறமை தான் முக்கியம் – சாதி அல்லது சாதி சார்ந்த சூழல்கள் அல்ல,
Ego – Productive ஆக இருக்கவும் பயன்படும்,
எவ்வளவு Ego இருந்தாலும் கணவன் மனைவி உறவும், காதல் உறவும் … Ego வை நொறுங்கி அடிக்க செய்யும் ..
என்று பல பாடங்களை வரிசையாக காட்சியாக, கதைக்குள் கொண்டு வந்த திறமைக்கு பெரும் Salute !
மனைவி யும், மகளும் என்று நடிக்கும் Characters மிக மிக முழுமை. Sanjana Krishnamoorthy, Swasthika .. இருவரும் வாழ்கிறார்கள். அதே நேரம் … வாழ்க்கையை தாங்களாகவே என்று முன்னெடுக்கிறார்கள். ஆண் சரியில்லை என்றெல்லாம் அழுது கொண்டு இருக்கவில்லை.



அந்த இரு நகைச்சுவை நடிகர்கள் – மாமனார் மருமகனுடன் அடிக்கும், எதிர்ப்பக்கம் அடிக்கும் வார்த்தை அலப்பறைகள், ஆங்காங்கே உணர்வை காண்பிக்கும் முக வடிவங்கள் – இன்னொரு வடிவேலு, இன்னொரு விவேக் கை கொண்டு வர முடியும் – அவர்கள் கொஞ்சம் முயற்சித்தால். நாம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அடுத்த 10 வருடங்களுக்கு சிரிக்க முடியும்.
யோசியுங்கள் இயக்குனர்களே.



நமக்குள் சாதி பார்க்கும் திமிர் இருக்கட்டும், பெண் நம்முடன் விளையாடக்கூடாது என்பதும் ஆணின் சாதீய திமிர் தானே ? என்னும் கேள்விக்கு எதிரே ஆடும் அந்த அகிலா க்கள் இன்னமும் நிறைய வர வேண்டும்.
இப்போதும் சினிமா – ஆணால் மட்டுமே அனைத்தையும் செய்ய முடியும் என்று – வருடத்திற்கு 100 ல் 85 அல்லது 90 படங்கள் மூலமாக சொல்லிக்கொண்டே இருக்கிறது. அகிலாக்களின் வரவும், இப்படி ஏன் இருக்க கூடாது என்கிற கேள்வியும் நமக்க்குள் எழுந்து கொண்டே இருக்க வேண்டும். இது ஏதோ ஒரு அகிலா Character இல்லை. இப்படி சில Templates உடைக்கப்பட வேண்டும். அது தான் Bottom Line.



நல்ல தமிழ்ப்படங்கள் Series ல் பழைய புதிய படங்களை வரிசையாக எழுதவிருக்கிறேன். இப்படியான படங்களை பார்ப்பதால் – எங்கோ ஒரு பொறி தட்டினால் அதுவே இந்த எழுத்துக்கான சொல்லப்படாத பின்னூட்டம் !


