படம் சொல்லும் பாடம் – 091
#படம்சொல்லும்பாடம் ; 091
” மென் உணர்வுகளுக்கு என்று ஒரு வழி இருக்கிறது. அவை புரிந்தவர்கள் பெரும் கோடீஸ்வரர்கள் – புரிதல் வாழ்க்கையில் ! “



எழுத்தாளர் சம்பந்தப்பட்ட கதை என்பதாலோ என்னவோ மனம் மிக மிக நெருக்கமாக உணர்ந்த படம் இது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு எழுத்தாளர் சந்திப்பு. பெரும் எழுத்தாளர்கள் சந்திக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். சந்திக்கும் நாடு Morocco ! என்னவோ தெரியவில்லை .. இந்த படத்தில் காண்பிக்கப்படும் Morocco கண்ணை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக எழுத்தாளர் செல்லும் ஒரு Surprise குடும்ப Visit – கிட்டத்தட்ட கவிதை. காட்சிகள் ஒவ்வொன்றும் அழகு. குறிப்பாக எழுத்தாளர்கள் வெளியே சந்திக்கும் அத்தனை Frame ம் !
தனியாக வந்திருக்கும் பிரபல பெண் எழுத்தாளர், முதல் புத்தகத்திலேயே பிரபலம் அடைந்த பெண் எழுத்தாளர் மற்றும் அவரது கணவர் – இந்த மூவருக்குள் நடக்கும் ” புரிதல் / சொல்லாமல் புரிதல் / சொல்லிப் புரிதல் / சொல்லியும் புரியாது போதல் / சொல்லவும் இல்லை புரியவும் இல்லை … கதை தான் படம். கணவன் மனைவியாக வந்து பிரிதலும், தனியாக வந்து சேர்தலும் தான் மொத்த கதையின் கரு. ஆனால் அதை புரிய வைக்கும் உள்ளுணர்வுக் காட்சிகளை எடுத்திருக்கும் விதம் .. Classic !
படம் முழுக்க பேசும் வரிகளில் நுட்பம் அதிகம். கணவன் மனைவியாக இருப்பவர்கள் கவனித்தால் அவர்கள் எங்கே வார்த்தைகளில் தவறு செய்கிறார்கள் என்று புரியும். குறிப்பாக எழுத்தாளர்கள் அனைவரும் விளையாடும் போது அதைப்பற்றி தெரியாத கணவனை அழைப்பது, ஏதோ ஒரு வரியை சொல்லி … அதை கணவன் அவமானமாக உணர்வது .. எழுத்தாளர் மனைவி – ஆனால் இந்த உணர்வை புரியாது இருத்தலும், தூர இருக்கும் எழுத்தாளர் பெண்மணி இந்த உணர்வை சரியாக புரிந்து கொள்ளுதலும் … பொதுவாகவே கொஞ்சம் ” தள்ளி ” இருந்து கவனித்தால் அனைத்தும் புரியும் போல !
தான் மிக மிக விரும்பும் எழுத்து காணாமல் போகும் போது வெளிவரும் பெண் எழுத்தாளரின் உண்மை முகம், தன் மனசாட்சிக்கு எதிராக Business செய்ய முடியாது தவிக்கும் … அல்லது தவிர்க்கும் .. ஆண் கணவன், சட்டென கிடைத்த புகழில் .. புரிதலை இழக்கும் பெண் எழுத்தாளர் என்னும் மனைவி … என்று வாழ்வியல் நுட்பங்களை காட்சிகள் பேசிக்கொண்டே இருக்கின்றன.
என்னை பொறுத்தவரை … படம் மிக மிக எளிய படம். மாயாஜாலங்கள் காண்பிக்காத .. Technical Expertise காண்பிக்காத … Simple Poster காட்சிகள் நிறை படம்.
ஓய்வாக இருக்கும்போது – உண்மையிலேயே ஓய்வாக இருக்கும்போது பார்க்கவும். குறிப்பாக எந்த வித Twists Turns எல்லாம் எதிர்பார்க்காமல் ! ஆம். நிஜ வாழ்க்கையில் Twists Turns எல்லாம் மென் உணர்வுகளில் வரும். மென் உணர்வுகளில் மட்டுமே !!