படம் சொல்லும் பாடம் – 097
” நெறிப்படுத்துதல் அல்லது இலக்கை நோக்கி மூர்மைப்படுத்துதல் என்பது வாழ்வியலின் ஒரு பகுதி அல்ல. அதுதான் வாழ்க்கையே ! “



” இங்கே இருந்து 5 வருடங்கள் கழித்து என்னவாக ஆக விரும்புகிறாய் ? “
என்னும் கேள்விக்கு பதில் மிக எளியதாக இருப்பது போல தோன்றும். ஆனால் அப்படி அல்ல. மிக மிக பலம் நிறைந்த கேள்வி என்றால் இது தான்.
இப்படி பல கேள்விகளை உள்ளடக்கி ஒரு படம் வரும் என்று நினைத்து பார்க்க முடியுமா ?
விளையாட்டாய் திரியும் ஒரு 19 வயதுப் பையனின் – வாழ்வியல் ஒரு நல்ல Mentor ஆல் என்ன ஆகிறது என்பதே படம். மிக மிக Lite ஆக ஒரு கதை. ஆனால் கேள்விகள், பதில்கள், வாழ்க்கைக்கான காரணிகள் ….. என்று நமக்குள் பல பரிமாணங்களை ஏற்படுத்தும் கதை !



படம் முழுக்க வியாபாரம் ஒரு பக்கம் எனில் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை இன்னொரு பக்கம் என்று அங்கங்கே அறை விழுந்து கொண்டே இருக்கிறது. Discipline தான் முதல் பாடம்.
Bad Reasons are a way to Disrespect others !
என்பதில் இருக்கும் ஆழம் புரிய வேண்டியது. சிறு வயதுகளில் நாம் செய்த தவறுகள் ஒவ்வொன்றாக நமக்குள் விரிய ஆரம்பிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.
Showing up early is a respect to others feelings !
அந்த அம்மாவிற்கு Prayer தான் எல்லாம். படத்தில்.சொல்லப்படுவது போல Prayer Spare Tyre அல்ல. Steering Wheel !!
” its better to learn from others mistakes than continually making your own “
” Fountain or Drain ? Who are you ? “
” Forgive and Leave it to HIM “
” Heavenly Father or Earthly Dad ? “
” It takes 15 years to Get these people. A small circle but an influencing one “
படம் முழுக்க வாழ்வியல் கொட்டிக்கிடக்கிறது.
தேவை அற்றவை அவரின் அறையில் / வீட்டில் இருந்து வெளியேற, தேவையானவை உள்ளே நுழைய ஆரம்பிப்பதில் இருக்கிறது மொத்த பாடங்களும்.
இங்கே Jesus என்பது ஒரு வழிகாட்டல். நம்பிக்கை. முன்னேற்றம். Chiristianity ல் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் இந்தப் படத்தை குழப்பிக்கொள்ள வேண்டாம்.
” வழிமுறை என்னவாக இருந்தால் என்ன ? உயரிய வாழ்கையை அடைந்து விடு “
என்பதே தத்துவம்.



அனைத்து பதில்களும் தெரிந்தாலும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருக்கும் Mentor ன் வலி அனைவர்க்கும் புரிவது இல்லை.
அதை Unconditional ஆக செய்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
Youngsters are Not useless, They are Used Less என்று சொன்ன விவேகானந்தர் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறார்.
” விதை நல்லதாக இருக்கட்டும் மற்றபடி மரம் அதன் வேலையை செய்யும். ” என்னும் பொருள் கொண்ட திருக்குர்ஆன் ம் நினைவில்.