நான் எனப்படும் நான் : 013
எனை redesign செய்யும் நினைவுப்பரிசுகள் :
நினைவுப்பரிசுகள் அலங்கார தோரணைகள் அல்ல. அவைகளுக்கு என்று சில intent இருக்கிறது. என் நண்பர் ஒருவர் எனக்கு weighing machine ஒன்றை அளித்தார். அப்போது நான் கொஞ்சம் weight add ஆன கால கட்டம். அவர் எனக்கு மறைமுகமாக சொல்ல நினைத்ததை அந்த பரிசு வெளிப்படையாக பேசியது.
இன்னொரு நண்பர் என்னை fitness gym அழைத்து சென்றார். Registration செய்து சிரித்தார். அப்போது ஆரம்பித்த என் உடல்நலம்/ உடற்பயிற்சி பற்றிய பார்வை இன்றும் தொடர்கிறது. ஆங்காங்கே … சில நாட்கள் நான் இதில் விலகி இருந்தாலும், பெரும்பான்மையான நாட்கள் உடல் நலம் சார்ந்தே என் இயக்கம் இருக்கிறது.
நட்பு ஒன்று அளித்த fitbit நடை பற்றிய பார்வையை மாற்றியது. ஏதோ என நடந்த நான், numbers கவனித்து நடக்க ஆரம்பித்தது இங்கேதான். சிறு வயதில் மாடு மேய்த்த சிறுவன் தான் நான். நடப்பது மேய்த்தலில் இயல்பு. இயல்பை கண்டுபிடிக்க உதவிய அந்த நட்புக்கு எம் மகிழ் மனம் நிறையும் நன்றிகள்.
இதற்கு முன்பு Decathlon இல் ஒரு bag வாங்கி, அதை தோளில் அணிந்து இருப்பேன். அது டோரா bag போல இருப்பதாக ஒரு feedback நட்பிடம் இருந்து. ( வாங்கும்போது இப்படி எல்லாம் யோசிப்பதில்லை நான். Purpose மட்டும்தான் என் கண்ணில். ). அதே நாள் இன்னொரு நட்பு தம்பதியிடம் இருந்து … ஒரு அழகான bag பரிசாக வந்தது. STyle ஆக இருப்பதாய் போகிற இடங்களில் எல்லாம் சொல்கிறார்கள். ( இன்று காலை கூட ! ).
சில மாதங்களுக்கு முன் accident நடந்த போது, நட்பு ஒன்று கொடுத்த மருந்து மாத்திரைகள் உடலை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது. Caring பக்கத்தில் இருந்து மட்டுமே செய்ய வேண்டும் என்று யார் சொன்னது ? அதே நட்பு கொடுத்த T Shirt ஒன்றை போட முடியாது வைத்திருந்தேன். Weight குறைத்து விட்டு போட்டுக்கொள்ளலாம் என்று எண்ணம். சமீபத்தில் நட்பு என்னை ” சொன்ன promise இன்னும் காப்பாற்றப்படவில்லை ” என்று சொன்னபோது .. உள்ளே alarm அடித்தது. Busy Schedules என்று காரணம் சொல்ல விரும்பினாலும்… promise promise தானே. ஆக .. மீண்டும் உடல் கவனத்தில் focus வர .. அதனால் இப்போது அணிந்திருப்பதே இந்த T Shirt. புத்தன் என்னுடன் பயணிப்பது மகிழ்வு. நாடோடியின் ஆழ்மனதிலும் அவரே.
” நிறைய படிக்கிறீர்கள் ஜெய். கண்ணாடி அணிதல் நல்லது ” என்று மருத்துவ நட்பு சொன்னதன் பேரில் .. கண்ணில் கண்ணாடி. ” உங்களுக்காக இந்த சாயிபாபா மோதிரம் ” என்று கொடுத்த நட்பின் நினைவாக கையில் மோதிரம். ” கண் பட்டிருக்கும். வேண்டி கொண்டு கையில் கட்டுங்கள் ” என்று சொன்ன நட்பின் நினைவாக சிகப்பு கயிறு. துபாய் சென்ற அப்பா வாங்கி வந்த running க்கான Shorts & T Shirt. அம்மா கொடுத்த மோதிரம். Uk வில் இருந்து தங்கை கொடுத்த Watch. அத்தனையும் அன்பின் பிரதிபலிப்புகள். என்ன தவம் செய்தனை !!
” அப்படீன்னா ஒன்னு கூட உன்னுதில்லையா ? ” என்று ஒரு நட்பு கிண்டல் செய்த போது .. வந்த அழகான கோபம் மறைத்து சொன்ன பதிலை இங்கு பதிவு செய்கிறேன்.
” எனக்கென்று நான் யோசிப்பதேயில்லை. பிறர் நலன் என்று கவனம் செலுத்தி ( தொழிலும் அதுவே ! ) வாழும்போது, நமக்கென்று கவனம் கொள்ள யாரோ ஒருவர் இயற்கையால் அனுப்பப்பட்டு விடுவர். நான் மற்றவர்களை பற்றி யோசிக்கும் இதே நேரத்தில், என்னைப்பற்றி யாரோ யோசிப்பது போல் வரம் உண்டா உலகில் ? ” என்று சிரித்து சொன்ன பதிலுக்கு அவர் ஒரு ” sorry ” யை பதிலாக பதிவு செய்த போது .. சிரித்து கடந்தேன். உலகம் அப்படித்தான். எதையாவது பேசும். பின் மாற்றிக்கொள்ளும். பின் மீண்டும் மாறும்.





