நகரும் புல்வெளி : 009
நோக்கம் சரியெனில், வழி தானாகவே அமையும். நோக்கம் பொது நன்மை சார்ந்தது எனில் … மனிதர்கள் தானாகவே அமைவார்கள். நோக்கம் தனி மனிதனின் சிறப்பான விஷயத்தை வெளிக்கொணரும் எனில் … சூழ்நிலைகளும் அதற்கு தக்கவாறு அமையும்.
பயணங்களில் planning மிகவும் முக்கியம் என்று சொல்பவர்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அதை பயணம் அதாவது travel என்று வகைப்படுத்துதல் இயலாத ஒன்று. ஆங்கிலத்தில் tour என்று ஒரு வார்த்தை உண்டு. I am not a tourist, I am a traveller – என்று ஒரு புகழ்பெற்ற வாக்கியம் உண்டு. இந்த நேரத்தில் இங்கே இருக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் பயணிக்கும்போது நேரம் மட்டுமே கண்ணில் நிற்கும். மற்றவை கண்ணில் தெரிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இயற்க்கையிடம் சென்று வருகிறேன், இயற்க்கை என்னை பார்த்துக்கொள்ளும் என்று பயணம் ஆரம்பிப்பவர்களுக்கு இயற்க்கை தானாகவே வழி அமைக்கும். Zen தத்துவங்களில் .. ‘ as you move with an open mind, your way will take you ‘ என்று படித்த ஞாபகம். என்னுடைய மிகச் சிறந்த பயணங்கள் என்று பட்டியல் இட்டால் .. அவை அனைத்தும் எந்த planning க்கிற்குள்ளும் வராதவையே. இன்றைய பயணமும்.
அடுத்த மாதம் 4 ஆம் தேதி எங்கே இருக்கிறாய் என்று கேட்டால் சிரிப்பு வரும் எனக்கு. அதை 3ஆம் தேதி இரவு பேசிக்கொள்ளலாமே என்று சொல்லத் தோன்றும். நிச்சயம் அற்ற உலகம் இது. ஒரு Guessing என்று வேண்டுமானால் சொல்லி ‘ இப்படி ‘ இருக்கலாம் என்று சொல்லலாம். ஆனால் யதார்த்தம் ஏகப்பட்ட மாறுத்தலுக்கு உட்பட்டது. நிகழ்வுகளை கொஞ்சம் சரியாக கவனித்தால் .. அதைப் பற்றி பேச ஆரம்பித்த நாளும் , முடியும் நாளும் வேறு வேறு விதமாய் இருக்கும். ஒரு பழமொழி உண்டு .. ” கடவுளை சிரிக்க வைக்க வேண்டும் என நீ நினைத்தால் .. உன் plans ஐ அவரிடம் சொல் ” என்று. அப்படித்தான் இயங்குகிறது இந்த பெயர் அற்ற உலகம்.
நேற்று நான் கிளம்ப ஆரம்பித்த போது .. நினைத்த Guessing இன்று சுத்தமாக மாறி இருக்கிறது. வீடு வந்து அடையும்போது ( இன்னும் அடையவில்லை ) நான் பேசியதிற்கும், இப்போது வந்து சேர்வதற்கும் சம்பந்தமே இல்லை. இதை புரிந்து கொள்வதால் பயணம் இனிக்கிறது. ஒரு பயணம் முழுக்க tension ஆக சுற்றும் மனிதர்களை நான் கவனித்தது உண்டு. நேரம், இடம், முடிவு .. தான் அவர்களின் priority ஆக இருக்கும். ( இது தவறு என்று நான் சொல்லவில்லை ). அப்படி priorirty மாறி விடுவதால் .. அந்த பயணத்தின் அழகு கண்களில் தெரிவதில்லை. சுற்றி படர்ந்து இருக்கும் இயற்கை கொஞ்சமும் தெரிவதில்லை. வேகமாய் சென்றோம், வேகமாய் வந்தோம் என்பதற்கு என்ன பொருள் என்று பிடிபடவில்லை. Regular ல் இருந்து விலகும் இந்த பயண நேரத்திலாவது … எல்லாவற்றில் இருந்தும் விலகி செல்ல ஏன் மனம் வருவதில்லை ?
ஏற்காடு இன்று மிகவும் வித்தியாசமாய். அழகாய். ரம்மியமாய். இளமையாய். செறிவாய். ஒவ்வொரு முறையும் ஏற்காடு புதுமையாய். அதற்க்கு காரணம் ஏற்காடு மட்டுமல்ல. ஏற்காட்டை பற்றி எந்த ஒரு pre constructed mind ஐயும், opinion ஐயும், pre planning ஐயும் .. வைத்துக்கொள்ளாமல் செல்வதும் தான். இன்று எடுத்த சில புகைப்படங்கள் மிகவும் அருமையானவை. நினைக்கவே முடியாத அளவிற்கு அழகாய் வந்தவை. ஒரே ஒரு நோக்கம் தான் – ‘ சென்று வருவோமே ‘. அப்படி செல்லும்போது கிடைப்பவை எல்லாம் அழகாக மாறுகிறது. ஆம். மாறிக்கொண்டே இருக்கிறது.
யோசிப்போம்.