நகரும் புல்வெளி : 029
Autograph என்பது என்னை பொறுத்த வரை, ஒரு வாழ்த்தும் வாய்ப்பு. என் கையெழுத்து என்பதை விட, என் எண்ணத்தை கொண்டு சேர்க்கும் கையெழுத்து என்று தான் நான் அதை கவனிக்கிறேன்.
- 07. 2010 அன்று, என் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட Gopi என்கிற excellence க்கு, ‘ உள் உணர்தலே வெளி வளர்ச்சி ‘ என்று கையெழுத்திட்டு என் எண்ணத்தை பகிர்ந்திருக்கிறேன். அதே Gopi மீண்டும் 01.11.15 என் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும்போது, அவரின் வாழ்க்கை ஒரு challenge ஐ சந்திக்கிறது. அங்கே ” அத்தனையும் நன்மைக்கே ” என்று கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறேன். மீண்டும் அதே Gopi 04.07.18 பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும்போது, ” உன் பார்வை உலகமாகாது ” என்று கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறேன். முதல் முறை சந்தித்த போது, ஒரு ஊழியர் என்ற நிலையில் இருந்த Gopi, இன்று ஒரு நிர்வாக பிரிவின் மேலாளராக வளர்ச்சி அடைத்திருப்பது மனதிற்கு நிறைவு.
Autograph என்பதற்கு ஆயிரம் definitions இருக்கட்டும். ஆனால் என்னை பொறுத்தவரை, அது ஒரு ஒற்றை சொல்லாக, ஒரு வரி யோசிப்பாக, ஒரு ஆன்ம ஆறுதலாக, ஒரு செதுக்கும் கேள்வியாக இருப்பதே அதற்கான மரியாதையாக இருக்கும். ஏதோ ஒரு வரி, யாரோ ஒருவரின் வாழ்க்கையை மேலே கொண்டு செல்லும் எனும்போது, அது ஏன் autograph வரியாக இருக்க கூடாது ?
ஆழ் மனதில் தோன்றும் வரிகளையே autograph வரிகளாக நெய்கிறேன். Recent ஆக அப்படி நெய்த ஒரு autograph வரி ..
” எல்லாம் சரி. அடுத்தது என்ன ? “