இதயமும் இமயமும் 001
” If Visuals are Meditations, then, Travel is the Temple ”
Hanle, Info Chinese, Indo Tibetan – Border Village, Ladakh, J&K, India.
வாழ்க்கை அப்படித்தான். அழகான பகுதிகளை அப்படியே விட்டுவிட்டு நகரத்தில் அமர்ந்து எதையோ தேடிக்கொண்டு இருக்கும். Hanle ஒரு ஆயிரம் பேர் மட்டும் வசிக்கும் அழகான கிராமம். ஒரு நீண்ட பயணத்தின் முடிவில் அந்த பயணத்தின் முத்தாய்ப்பாக Hanle வந்து சேரும்.
Hanle வில் அதிகாலையில், single digit குளிரில், morning walk போனது இன்னும் நினைவில். பொதுவாக குளிர் பிரதேசங்களில் காலை walking வித்தியாசமான ஒன்று. நடக்க நடக்க வாங்கிக்கொள்ளும் மூச்சினை நாமே கேட்டுக்கொண்டே நடப்பதும், உள்ளே அரும்பும் வியர்வையை வெளிக்குளிர் உடனே காய வைப்பதுமான போட்டி. Oxygen குறைவாக இருக்க, மூச்சு வாங்குதல் நடக்க, நாமும் கூட நடக்க ….. நான்கு யானையை இழுத்துக்கொண்டு நடப்பது போல பலம் தேவைப்படும் அந்த நடைக்கு. ஆனால் அங்கே வீசும் சிறு தென்றல் இவை எல்லாவற்றையும் சரி செய்து கொண்டே நம்மை “இன்னும் கொஞ்சம் முன்னேற வா” என்று இழுக்கும்.
Hanle கொஞ்சம் sensitive area. Border என்பதால் முதலிலேயே இந்திய அரசங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். சில Km களில் எல்லை காத்திருப்பதால், கொஞ்சம் கெடுபிடி எல்லாம் உண்டு. Thriller time தான். ஆனாலும் ஆட்கள் அற்ற ஒரு பகுதியில், Hanle நோக்கிய பயணமே ஒரு Thriller வகை தான். ஒரு நாள் முழுக்க பயணத்தில் ஒரே ஒரு மனிதரை நாம் வழியில் பார்த்தால் பெரிய விடயம். ஒன்று சொல்ல வேண்டும் … ஆட்களே அற்ற பகுதிக்கு நாம் செல்லும்போது மட்டுமே, இந்த பூமிக்கும் நமக்குமான உறவு உணரப்படும். ஒரு பரந்த வெளி. நீல வானம். ஆங்காங்கே ஒட்டி வைத்தாற்போல் மேகங்கள். ஆறு. மண் வழி. கண்ணுக்கெட்டிய வரை அழகான நிலம். Reverse V மலைகள். மற்றும் நாம் மட்டும். யோசிக்கவே பிரம்மாண்டம் என்று தோன்றலாம். ஆம். அங்கே தான் வாழ்க்கை அழகாக விளங்கும். நிதானமாக எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும். ( நகரத்தின் அரக்க பறக்க வாழ்வில்… எண்ணங்கள் பிரசிவிப்பதை எல்லாம் நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை ! ன்)
கிராமத்து வீடு ஒன்றில் தான் தங்கல். சமையல் அறையின் சுவர் முழுக்க சமையல் பாத்திரங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடியும். அதில் இருந்து தேவைப்படுவதை எடுத்து கொள்ளும் வகையில் ! சமையல் இங்கே தரையில் அமர்ந்து சமைத்தல் வகை. கோதுமை ரொட்டி, பருப்பு, omlette, noodles .. தான் பிரதான உணவு. Tea க்கு கேட்கவே வேண்டாம். வெளியே குளிரும், உள்ளே tea யுமாக உடல் ஒரு குளிர் வெப்ப தாக்குதலை அழகாய் எதிர்கொண்டு கொண்டே இருக்க வேண்டிய நிலை !
Indian Astronamical Observatory இங்கே இருக்கிறது. எல்லை பகுதி, வான் கவனிப்பு, தொலை நோக்கு பார்வை என்று மிகவும் பரபரப்பாக இருக்கும் பகுதி இது. அனுமதி கொடுக்கப்பட்டால் உள்ளே சென்று பார்க்கலாம். உள்ளே சென்று பார்த்தேன். சில மனிதர்கள் வாழும் இந்த பகுதி Hanle வில் இருந்தும் தனித்து இருக்கிறது. அந்த சில மனிதர்களுக்குள் மட்டுமே பேச்சு, பார்வை, வாழ்க்கை .. என்று ஒரு வாழ்க்கை. நட்புணர்வு இல்லை எனில் தனிமை தான் பதில் போல .. அனைத்து கேள்விகளுக்கும் !
Hanle River ஐ ஒட்டியே சாலை நம்மை இழுத்து செல்லும். வழியெங்கும் வானின் நீல பிரதிபலிப்பை பார்த்துக்கொண்டே செல்ல முடியும். நதியின் stillness என்று ஒன்று உண்டு. அதாவது நீங்கள் பார்க்கும் நதி ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் வான் காட்சிகள் சிதறாமல் உள்ளது உள்ளபடி கண்ணுக்கு தெரியும். அந்த stillness ஐ பார்ப்பது தியானத்திற்கு இணையானது ! நகரா மேகம், நகரும் நதி, நகரும் நதியின் மேல்புற பிரதிபலிப்பாக நகரா மேகம் … இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு உண்டா என்று கேட்க வைக்கும் காட்சி அது. மௌனம் அங்கே யதார்த்தமாக கிடைக்கும். பேச்சு தான் அபூர்வம் !
Hanle Monastery யில் மனதை zero விற்கு எளிதாக கொண்டு வர முடியும். அப்படி ஒரு அமைதி அந்த புத்த மண்ணில் கிடைக்கும். ஒரு தியானம் எப்போது தன் மூச்சின் சத்தத்தையும் மறந்து நிற்கிறதோ .. அப்போதுதான் அது பிறக்கிறது என்று அர்த்தம். அது இங்கே சர்வ சாதாரணமாக நடக்கும். செவ்வண்ண ஓருடை அணிந்த monk கள் நம்மை பார்த்து சிநேகமாக சிரிப்பதில் .. மனிதம் இவ்வளவு அழகா என்று உள்ளே கேள்வி கேட்க ஆரம்பிக்கும்.
இமயம் பயணிப்பவர்கள் குறிப்பிட்ட tourist பகுதிகளை பார்த்துவிட்டு இமயம் பார்த்ததாய் பெருமைப்படுவது நடக்கும். அப்படி அல்ல. முதலில் tourist பகுதிகள் இமயம் அல்ல. அவை மனிதர்களால் spoiled ஆன இயற்கை பகுதிகள். இமய மலையை வாழ்நாளில் பார்த்து முடிக்க முடியாது. அவ்வளவு பெரியது. அவ்வளவு காட்சிகளை அகத்தே கொண்டது. இங்கே தான் தோன்றியாய் திரிபவன் திரிபவள்.. ( Wandering ) திரும்ப வந்து பேசும் பேச்சு நமக்கு புரிய நாட்கள் பல ஆகும். அவனை அவளை அந்த இமய மண் அவனுக்கு அவளுக்கு உணர்த்திய பின்பு அவன் அவள் பேசுவது அது. அந்த மொழி புரிய நாம் இமயம் பயணிக்க வேண்டும். பரந்த நிலத்தில் தனியனாய் நின்று வானையும் மண்ணையும் இணைக்கும் ஓர் புள்ளி பார்த்து ” நான் ஒன்றுமற்றவன் ” என்று உணரவேண்டும். அதன் பின் … அவன் அவள் இந்த பேருலகத்தின் பெரும் பிள்ளைகள், யதார்த்த வாரிசுகள், ஐம்புலன் அரசர்கள் !
என்ன .. இமயம் செல்வோமா ?