காட்சிக்கவிதைகள் : 003
சூரிய கோவிலின் உள்புற கூரை. கோவில்களில் கடவுள் எவ்வளவு முக்கியமோ அதைப்போல முக்கியம் கடவுளை காக்கும் கூரைகள். வெளிப்புறம் இருந்து கும்பிடும் நாம் உட்புற கூரைகளை கவனிப்பது இல்லை. அங்கேயும் இருக்கிறது அழகு.
இந்த புகைப்படம் தரையில் படுத்து, நேருக்கு நேராக கூரையை பார்த்து எடுக்கப்பட்டது. நான் இந்த புகைப்படத்தை எடுத்த போது சிரித்த மனிதர்களை கவனித்திருக்கிறேன். இந்த உலகம் அப்படித்தான். ஒருவன் ஒன்றை செய்யும்போது சிரிக்கும். பின்னாளில் அதன் value தெரியும்போது அவனை பாராட்டும். ஆனால் பொதுவாக அப்போது அவன்கள் இருப்பதில்லை !
1000 வருடங்களுக்கு முன் செய்யப்பட்ட இது .. எப்படி எல்லாம் யோசிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு, செய்யப்பட்டு இருக்கும் ! எவ்வளவு பேர் உழைத்து இருப்பார்கள் ! அப்படி ஒரு கால சாட்சிக்கு இந்த புகைப்படம் ஓர் காட்சி மாலை.
எந்த கணினியும் இல்லாது மனக்கண்ணில் கணிதம் போட்ட அந்த excellence களின் வாரிசுகளும் இங்கே தான் எங்கோ இருக்க வேண்டும் ! அவர்களுக்கு ஒருவேளை இதைப்பர்த்தால் என்ன தோன்றும் ? தொப்புள் கொடி உறவின் தாக்கமாக உணர்தல் நடக்குமோ ?
புகைப்படங்கள் வெறும் horizontal பார்வையில் மட்டும் கிடைப்பதில்லை. Vertical, angle, 180 degrees reverse, கீழிருந்து, மேலிருந்து .. எப்படியும் ஒரு புகைப்படம் எடுக்க முடியும். யோசிப்போம்.
கேள்விகள் இருப்பின் கலந்துரையாடலாம். பதில்களை தெரிந்த அனைவரும் சொல்லலாம்.
பயணிப்போம். காட்சிகளுடன்.