நாலடியார்: 01
” அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் வறிஞராய்ச்
சென்றிருப்பர் ஒரிடத்துக் கூழ்எனின் செல்வம்
( மூன்றாம் வரியின் அமைப்பை கருதி ஒரே எழுத்தை தனியாகவும் பின் நான்காம் வரியையும் சேர்த்திருக்கிறேன் )
அறுசுவை யுண்டி – ஆறு சுவையும் அடங்கிய உணவு.
அமர்ந்தில்லாள் – இல்லாள் – மனைவி
மறுசிகை – மறுபிடி ( அட ! இன்னொரு பிடி )
வறிஞர் – ஏழை ( ஆச்சர்ய பாடம் இது ! )
வைக்கற்பாற் றன்று – நிலையானதன்று. ( வைக்கம் என்றால் நிலையான என்ற பொருள் இருக்கும் போல ! )





