படம் சொல்லும் பாடம் 003
பலமுறை புகைப்படம் எடுத்தலா / வேறு ஏதாவது பொழுதுபோக்குகளா என்றால் என் முதல் choice – புகைப்படம் எடுத்தலே. ஒரு படம் இதை சார்ந்து இருக்கிறது என்றால் அதை பார்க்காமல் எப்படி இருக்க முடியும் ?
Passionate என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அப்படி ஒரு புகைப்பட கலைஞர் அந்தப் பெண்/அம்மா/மனைவி. அழகான குடும்பம். இரு குழந்தைகள். நேசமான கணவன். எல்லாம் சரி. ஆனால் இவை அனைத்தும் அந்த அம்மாவை / மனைவியை புகைப்படம் எடுப்பதில் இருந்து பின்னுக்கு தள்ளி வீட்டிற்குள் முடக்குகிறது. ஆனாலும் அந்த அவளுக்குள் இருக்கும் அந்த புகைப்பட பெண் உயிரோடு ஆங்காங்கே ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டே இருக்கிறாள். மகளுக்கு ஒரு project குக்காக ஆப்ரிக்க நாட்டிற்கு செல்ல, அங்கே நடைபெறும் கலவரத்தை live ஆக புகைப்படம் எடுக்க, இதை அறியும் கணவனுக்கும் மனைவிக்கும் / அம்மாவிற்கும் பிள்ளைகளுக்கும் பிரச்சினை வருகிறது. ஆனால் அவளுக்குள் உறங்காமல் இருக்கும் அந்த புகைப்பட பெண் இன்னும் உயிரோடு இருக்க Passion தான் முதல் இலக்கு என்று புது வாழ்க்கைப் பயணம் ஆரம்பிக்கிறாள்.
கதை இருக்கட்டும். rebeccaa வாக நடித்து இருக்கும் Juliette Binoche வின் நடிப்பு அட்டகாசம். அம்மா மனைவி Photographer மூன்று பரிமாணங்களையும் அழகாக அதே முகத்தில் கொண்டு வரும் அவரின் நடிப்பு வேறு உயரம். கணவன் இரு குழந்தைகளின் நடிப்பும் குறைவில்லை.
படத்தில் மேற்சொன்னவைகள் எல்லாம் கதைக்காக. அப்படி என்றால் என்ன சிறப்பு இந்த படத்தில் ? புகைப்படங்கள். புகைப்படங்கள். புகைப்படங்கள். புகைப்படங்கள் மட்டுமே. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சி அமைப்பாகட்டும். படத்தில் எடுக்கப்படும் / காட்டப்படும் படங்கள் ஆகட்டும். Suicide Bomber புகைப்படங்கள் மனதை உலுக்குபவை. அந்த மனித வெடிகுண்டு தாக்குதலை அப்படியே புகைப்படமாக எடுக்கும் rebeccaa வின் பரபரப்பும், முகமும், குறிப்பாக காட்சிகளை கைது செய்யும் கண்களும் … வார்த்தைகள் இல்லை. நீங்கள் புகைப்படம் எடுப்பவரா ?/ அதிலும் பெண் புகைப்பட கலைஞரா ? / உங்களுக்கு இந்தப் படம் நிறைய செய்திகளை வைத்துகொண்டு காத்திருக்கிறது. ஆண் புகைப்பட கலைஞரா ? இப்படியும் புகைப்படங்கள் எடுக்க முடியுமா ? அந்த புகைப்படங்கள் நாடுகளின் அரசியலில் ஏற்படுத்தும் அதிர்வலைகளை பற்றி .. இன்னொரு பார்வையில் உணர முடியும்.
ஒரு Camp இல் நடைபெறும் துப்பாக்கி சூட்டினை புகைப்படம் எடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்ப … அங்கே நிறைய military force protection க்காக வந்து இறங்குவதில் இருக்கிறது ஓர் புகைப்படத்தின் வலிமை !
Passion க்கும் குடும்ப வாழ்க்கைக்கும் எப்போதுமே ஒத்து வருவதில்லை. ஏதாவது ஒன்றை பெற ஏதாவது ஒன்றை இழக்க வேண்டி வரும். அப்படி இழப்பதும் நன்மையே. ஒன்று குடும்பம் சிறப்பாக வாழும். அல்லது தனிநபர் திறமை சிறப்பாக வெளிவரும்.
கொஞ்சம் நிதானமாக பார்க்க வேண்டிய படம். படத்தில் பேசப்படும் சில வரிகள் நம் வாழ்க்கையை திருப்பிபோட்டுவிடக்கூடும்.