படம் சொல்லும் பாடம் 05
நிறுவனங்கள் வேலையில் இருந்து ஆட்களை வெளியே அனுப்பும்போது … emotions அதிக அளவில் இருக்கும். Exit interview என்று ஒன்று நடக்கும். அதில் கோப தாபங்கள் வெடிக்கும். HR சரியாக deal செய்யவில்லை எனில் Court Case என்றெல்லாம் அலைய வேண்டி இருக்கும். சில நிறுவனங்கள் இவற்றை தவிர்க்க வேறு ஆட்களை இதற்காகவே வைத்துக்கொள்ளும்.
கதாநாயகன் அப்படி ஒரு வேலை பார்க்கிறான். ஆட்களை வெளியேற்றும் வேலை. 365 நாட்களில் 300 சொச்ச நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் வேலை. ஒவ்வொரு நகரமாக, நிர்வாகத்திற்கு தேவை அற்ற ஆட்களை .. பேசி வெளியேற்றுவது அவர் வேலை. திடீரென்று ஒரு நாள் நிறுவனம் வெளியே அனுப்புவதையும் video conferencing மூலம் சொல்லி விடலாம் என்று நினைக்கிறது. மனித உணர்வுகள் அவ்வளவு எளிதானவை அல்ல என்பதை கதாநாயகன் புரியவைக்கும் விதம் / நடைமுறை தான் வாழ்க்கை ! இதில் அவன் personal வாழ்க்கையும். Technology யை கொண்டு வேலை இல்லை என்று சொல்லிவிடலாம் என்று சொல்லும் புது பெண் தொழிலாளியிடம் க்ளூனி பேசும் விதம் … வாவ். நான் எனக்குள் பேசிய அதே வார்த்தைகள். Trainer ஐ Trainer ஏ காமுறுவர் !
பயிற்சியாளர் வேலை நாம் நினைப்பது போல எளிதானது அல்ல. அதற்கு ஆகும் செலவு செலவு அல்ல. ஒரு நிறுவன முதலீடு. தொழிலாளி ஒருவரின் மனம் நன்றாக இருக்கும் எனில் … அவரால் கிடைக்கும் வருமானத்தை compare செய்யும்போது இந்த செலவுகள் ஒன்றுமே இல்லை. ஆனால் பல நிறுவனங்கள் அப்படி பார்ப்பது இல்லை.
பயற்சியாளரின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. பலரின் மன சுமைகளை தாங்கிக்கொண்டு அதே சமயம் தன் சுமைகளை வெளியே சொல்ல முடியாத ஒரு வாழ்க்கை. Moral Benchmark என்கிற deadline வேறு கண்ணுக்கெதிரில் எப்போதும். நினைத்தது போல நடக்க ஒத்துழைக்கா மனம் அங்கும் இங்கும். பல பயிற்ச்சியாளர்கள் இப்படி வாழ்வது இல்லை. சராசரி ஆனால் எல்லாம் தெரியும் image இல் அழிந்து போகிற மனிதர்களாக பலர். Benchmark ஆக வாழ்வதற்காக நடிப்பவர்கள் பலர். ஒரு சிலரே இயல்பாக “இதுதான் நான் “என்று சொல்ல முடிந்த வாழ்க்கையை வாழ்பவர்கள். நான் அதில் ஒருவன் என்பதில் நிறை மனம் எனக்கு.
க்ளூனி போல வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முடியுமா என்று தெரியவில்லை ! என்ன ஒரு உடல் மொழி !! படம் பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகின்ற சில காட்சிகள். தங்கையின் திருமணம் நிற்கும் சூழ்நிலையில் பயிற்ச்சியாளராக பேசி மாப்பிள்ளையை தயார் செய்வது – அதுவும் தான் திருமணம் செய்ய விரும்பாமல் / அல்லது செய்து கொள்ளாத நிலையில் ! அழகான அலட்டாத நடிப்பு. புதியதாக வரும் பெண்ணின் அநுபவமின்மையை அமைதியாக கையாள்வது. தன்னுடன் இருந்த பெண் ஏற்கெனவே திருமணமானவள் என்று தெரிந்ததும் .. அதிர்ந்து நிற்பது. வாய்ப்பே இல்லை இப்படி ஒரு நடிகன்.
பயிற்ச்சியாளரின் வாழ்வில் ஏமாற்றங்கள் இருக்காதா ? அவர் அதை எப்படி சரி செய்கிறார் ? அவருக்கென்று energy எங்கே இருந்து எடுத்துக்கொள்கிறார் ? போன்ற பல கேள்விகளுக்கு suttle ஆக அழகான, வார்த்தைகளால் சொல்லா பதில்கள். கதாநாயகன் exact ஆக பயிற்ச்சியாளர் இல்லை எனினும் .. அந்த வேலை மனித உணர்வுகளை நேர்மறை எண்ணங்களை நோக்கி திருப்ப வேண்டிய வேலை.
நிறைய இடங்களில் என்னை பார்த்தது போல இருக்கிறது. நிறைய இடங்களில் ” நான் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை ” என்றும் தோன்றுகிறது. ஒரு பயிற்ச்சியாளராக மிக நெருக்கமான படம் என்றே இதை சொல்லலாம். அவரின் Backpack theories யோசிக்க வைப்பவை !
ஒரு வருடத்தில் அதிக miles பறந்தற்க்காக ( எனக்கு car நினைவுகள் ! ) அவரை பாராட்டும்போது .. நடு வானத்தில் விமானத்திற்குள் pilot கேட்கும் கேள்வி ஒன்று ..
” எங்கே இருந்து வருகிறீர்கள் ”
நடு வானை பார்த்து க்ளூனி சொல்லும் ஒற்றை பதில் ..
” இங்கே இருந்து ”
யாரோ ஒருவர் கேட்ட கேள்விக்கு .. நான் சொன்ன அதே பதில் !
சில இயக்குனர்கள்களால் மட்டுமே .. யதார்த்தத்தை படம் பிடிக்க முடிகிறது.