படம் சொல்லும் பாடம் 012
The Hundred Foot Journey ;
சில படங்கள் நம்மை யோசிக்க வைப்பதுடன், பெருமைப்படவும் வைக்கும். அப்படியே உள்ளே காட்சிகளை frozen செய்து வைத்திருக்கும். அப்படி ஒரு படம்.
France இல் பிரபலமான Restaurant க்கு எதிரே இந்திய உணவகம் திறக்கும் இந்தியக் குடும்பம், அதன் சவால்கள், அதை எதிர்கொள்ளும் விதம், அதில் உணவை மட்டுமின்றி மனதையும் வெல்லும் வாழ்வியல் .. அவ்வளவே கதை. ஆனால் இழைத்து இழைத்து எடுக்கப்பட்ட படம் ! ( இசை AR ரகுமான் ).
வர வர எனக்கு இந்த Helen Mirren நடிகையை மிகவும் பிடிக்கிறது. Leisure seeker இல் அசத்தியது வேறு விதம் எனில், இங்கு அசத்துவது இன்னொரு level. தன்னிடம் வேலை பார்ப்பவர் செய்த தவறுக்கு, அனுபவமானவர் என்ற போதும் உடனே Get out சொல்லும் ஒற்றை இடத்தில் அவர் நிலைக்க வைக்கும் Values மட்டும் எல்லோருக்கும் இருக்கும் எனில், உலகில் பிரச்சினைகள் என்று ஒன்று இருக்க வாய்ப்பில்லை. ஓம் பூரி அவர்களுடன் மோதுவதாகட்டும், அவரின் மகனின் திறமையை உலக அளவிற்க்கு கொண்டு செல்வதாகட்டும் … என்ன ஒரு நடிகை ! என்ன ஒரு யதார்த்த நடிப்பு. இவர் ஒரு பக்கம் எனில் ஓம் பூரி இன்னொரு பக்க அசத்தல். Hollywood இல் இருக்கும் நடிகர்களை question செய்யும் முக பாவனையும், குரல் ஏற்ற இறக்கமும். இந்த இருவரும் ஆடும் சில நொடி ஆட்டம் போதும் … நடிப்பில் flexibility என்றால் என்ன என்று கற்றுக்கொடுக்க !
இந்தியப் பையன், பிரெஞ்சு பெண் ( ஓவியம் போல் இருக்கும் expressions ).. இருவருக்கும் இடையில் மலரும் அன்பு, ஒரு பக்க பொறாமை, பின் மீண்டும் புரிதல் .. வாஹ்.
பெரும் உயரம் அடைந்த பின்னும், இந்திய உணவை உண்ணும்போது .. தான் எதை இழந்து கொண்டு இருக்கிறோம் என்று உணர்வதை அழுகையில் காட்டும் அந்த இந்திய பையன் … என்ன ஒரு கனிவான பார்வை கண்களில் !
நாக்கில் பட்டவுடன் சொல்லிவிடுவார் ” yes ” அல்லது ” no “. ” No ” என்றால் no தான். குப்பை தொட்டிக்கு தான் அந்த உணவு செல்லும் என்று values ஐ நிறுத்தும் களம் பல பேருக்கு தொழிலில் கற்றுக்கொள்ள வேண்டிய பால பாடம்.
இந்திய இசையில் பிரெஞ்சு காட்சிகள், அமைப்புகள், மனிதர்கள், ரசனைகள் .. என்று எங்கோ சுற்றுலா சென்றது போல இருக்கிறது. அட்டகாச ரசனை !
சில படங்களை நாம் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி ஒரு படம். நிதானமாக ரசித்து பார்க்க வேண்டும். அந்த முது வயது அன்பில் இழையோடும் பார்வை பரிமாற்றங்கள்… வாஹ் கவிதைகள் !
நிதானமாக பாருங்கள். உணர்வுகள் உள்ளே குழைய ஆரம்பிக்கும்.





