Q & A – 004
Q & A Part : 4
Q.No : 5
05. மிகவும் பயனுள்ள தொடராக அமையும். நிறைய கேள்விகள் இருக்கின்றன. முதல் கேள்வி சிறந்த parenting என்பது என்ன. எந்த எந்த கூறுகளை கவனம் கொள்ள வேண்டும், அதற்கான உழைப்பு என்ன. இன்றைய கால கட்டத்தில் parentingலில் எது மிகப்பெரும் சவாலாக இருக்கும். அதை எதிர் கொள்வது எப்படி, அதன் தீர்வை எப்படி அடைவது – Rajmohan Babu
———————————————————————-
Parenting என்பது என்ன ?
முதலில் Parenting என்பது பெற்றோர்களுக்கானது. குழந்தைகளுக்கு அல்ல. ( அப்படி எனில் Childrening என்று அல்லவா வரும் ? ) ஆம். Parenting என்பது பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் .. தங்களை எப்படி சரி செய்து கொள்வது என்பதே ! நிறைய Parenting Programs களில் … குழந்தைகளை குறை சொல்வதையும், Parenting மிகப்பெரிய சுமை போலவும் பேசுவது ஆச்சர்யமான ஒன்று.
Parenting இல் முக்கிய விஷயம் – பெற்றோர்களுக்கு தகுந்த மாதிரி குழந்தைகளை வளர்ப்பது அல்ல. Parenting என்பது.. குழந்தைகளின் உலகத்திற்கு தகுந்த மாதிரி பெற்றோர்கள் வாழ ஆரம்பிப்பது. அதாவது குழந்தைகளை புரிந்துகொண்டு .. தங்களின் பொறுப்புகளை அவர்களிடம் சேர்ப்பது. ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் ” நான் சொல்வதை கேள் ” என்கிற பெற்றோர்களையே கவனிக்கிறேன்.
Parenting மிகப்பெரும் சவால் ?
மிக எளிதான பதில். ஆனால் சவாலான ஒன்று. பெற்றோர்கள் தங்களின் போலியான முதிர்ச்சியை கழட்டி வைத்துவிட்டு குழந்தையாக மாற்றம் கொண்டு , குழந்தைகளின் உலகில் பயணித்து.. அவர்களை புரிந்துகொண்டு, மீண்டும் பெற்றோர்களாக மாற்றம் கொண்டு .. வளர்ப்பை கையில் எடுக்க வேண்டி இருக்கும். இப்படி மாற முடியாத, மாற்றத்தை விரும்பாத பெற்றோர்கள் தான் ” நான் சொல்வதை கேள் ” என்ற speed up process க்கு தயாராகிறோம். ஆக .. குழந்தைகளின் உலகில், குழந்தையாக மாற்றம் கொள்ள நீங்கள் தயாரா ?
தீர்வு ?
ஒரு நிறுவனத்தின் GM ஆக நீங்கள் இருந்தால்.. உங்களுக்கு 2 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை இருந்தால் .. வீட்டுக்கு செல்லும்போது, முதலில், GM முகமூடியை கழட்டி எறிந்து விட்டு, 7 வயது குழந்தையாக மாற்றம் அடைய தயாராகுங்கள். ( முடியுமா உங்களால் ? ). நீங்கள் இந்த உலகத்தில் வாழ்வது மிகப் பெரும் சவாலாக இருக்கிறது எனில் .. அதற்காக உங்களின் குழந்தையும் உங்களை போலவே tension ஆக சுற்றிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் உலகம் வேறு. அவர்களுக்கு Company, வரவு, செலவு, கணவன், மனைவி, மாமியார், fb பிரச்சினைகள் எல்லாம் பிரச்சினைகளே இல்லை. குழந்தைகளுக்கு
வாசலில் இருக்கும்… குருவி சாப்பிட்டதா இல்லையா ?
நகரும் எறும்பு எங்கே செல்கிறது ?
மழை ஏன் மேலே இருந்து கீழே விழுகிறது ?
Ice Cream ஏன் வழிகிறது ?
விதை எப்படி செடியாகிறது ?
… இன்னும் நிறைய கேள்விகள்.
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல பொறுமை இருக்கிறதா உங்களிடம் ?
அப்படி எனில்… நீங்கள் Parenting இல் Entrance Test இல் Pass செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.