Q and A – 06
#Part06
#questionandanswers
#QandA
07 : ஆண் பெண் உறவு ஏன் இத்தனை சிக்கலாக இருக்கிறது? Kirthika
சிக்கலாக இருக்கவில்லை. சிக்கலாக ஆக்கிக்கொண்டு இருக்கிறோம். ஆணைப் போலவே பெண்ணும் ஒரு படைப்பு. அவ்வளவே. இந்த உலகில் பேச தெரிந்த இரண்டு creatures அவர்கள். இருவருக்குமே survival Instinct .. ஒன்றே. வெளியே செல்வதால் ஆணுக்கு இந்த நுண் உணர்வு அதிகம் பெண்ணுக்கு குறைவு என்று சொல்பவர்களை பார்த்து சிரிக்கவே தோன்றும். பொதுவாகவே நாம் வாழும் சூழ்நிலை தான் ஆண் பெண் களின் .. நுண் உணர்வை தீர்மானிக்கிறது. எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் ஒரு ஆண் அவன் ஆண் என்பதாலேயே Advantage எடுக்க நினைப்பதும், அனைத்து வேலைகளையும் செய்யும் பெண் பெண் என்பதாலேயே Disadvantage .. ஆக உணர்வதும் தான் இவ்வளவு வருட நம் வாழ்வின் சாதனை.
பெண்ணை போகப் பொருளாக positioning செய்ய ஆரம்பித்தது முதல் சிக்கல் ஆரம்பிக்கிறது. அதே போல ஆணுக்கு கற்பு இல்லை என்று suttle ஆக positioning செய்ததும் ! ( எங்காவது கற்பிழந்த ஆண் – என்ற வார்த்தையை கேட்டதுண்டா நாம்? )
இது இரண்டும் ஏற்படுத்தும் inequality யில் இருந்து தான் சிக்கல் ஆரம்பம். இது இருக்கும் வரை ஆண் பெண் உறவில் சிக்கல் இருக்கும். அந்த சிக்கலில் ஆணுக்கு advantage ம் பெண்ணுக்கு Disadvantage ம் இயல்பாக இருந்துகொண்டே இருக்கும். கற்பை வைத்து ஒரு creature மிதிக்கப்பட்டு கொண்டே இருப்பது – நீண்ட நாள் கதையாக இருக்க வாய்ப்பில்லை. இப்போது காணும் நிறைய மாற்றங்கள், இந்த கதையை முடிவுக்கு கொண்டுவரும். அங்கே ஆண் பெண் உறவு சிக்கலாக இருக்கும் என்று தோன்றவில்லை.
Equality யில் வேறு பிரச்சினைகள் வரும். ஆனால் அது இப்போதைய பிரச்சினைகளை விட Better என்றே இருக்கும் என எனக்கு தோன்றுகிறது.
( இந்த பதில் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். கேள்விகள் இருப்பின் கேட்கலாம் )