Q & A – 007
Hi Jay Sir…epdi irukinga…நான் சண்முகராஜ்.. UAE la வேலை பார்கிறேன். திருமணம் முடிந்து ஒரு பையன் இருக்கிறான். என்னுடைய கேள்வி …வெளிநாட்டில் வேலை பார்ப்பதா அல்லது சொந்த ஊரில் வேலை பார்ப்பதா எது நல்லது ? வருங்காலத்தையும் மொத்தமாக சேர்த்து பார்க்கும்போது… குடும்பத்தை விட்டு எவ்வளவு நாள் விலகி இருப்பது? பதில் தாருங்கள்… நன்றி.
பொருளாதாரம் என்ற ஒன்றிற்காக அல்லது நமது திறமையின் அடுத்த உயரம் அடையவே வெளிநாடு செல்வது பெரும்பாலும் நடக்கிறது. அதற்கு ஒரு எல்லை இருந்தால் திரும்ப வருதல் எளிது. இல்லை எனில் சிரமமே.
உதாரணத்திற்கு ஒரு 25 இலட்ச ரூபாய் வேண்டும் என்று முடிவு செய்தால், அதற்க்கான உழைப்பை எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்துவிட்டு விரைவாக திரும்புதல் நலம். பணம் சம்பாதிப்பது என்று முடிவெடுத்தபின் .. அனைத்து வகையிலும், சம்பாதிக்க முயற்சிப்பதே திறமை. ஒரு நாளின் ஒவ்வொரு ரூபாய் அதிக வருமானமும் .. நம்மை விரைவாக நம் வீடு நோக்கி கொண்டு வருமல்லவா ?
என்னுடைய personal choice ஒன்று. எவ்வளவு வருமானம் வந்தாலும் net எவ்வளவு கையிருப்பு?, இதை இந்தியாவில் சம்பாதிக்க முடியாதா ? – இந்த இரு கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விட்டால் … அங்கே இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும். குடும்பத்தை இழந்து 40000 சம்பாதிப்பதை விட, குடும்பம் குழந்தைகள் என்று 15000 சம்பாதிப்பது மேல் என்பது எம் எண்ணம்.
உண்மையிலேயே திறமை மதிக்கப்பட்டு நல்ல வருமானம் இருப்பின், மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அங்கே settle ஆகலாம் என்றாலும் எம் choice இந்தியாவில் நம் ஊரில் இருப்பதுதான்.
( உங்களின் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கலாம். முன் வாழ்த்துக்கள் – குடும்பத்துடன் இணைந்து வாழ 😊😊 )