Q and A 009
100% உண்மையை உறவுகளிலும் நட்புகளிடத்தும் சொல்வது சாத்தியமா? அது உறவுகளையும் நட்பயெயும் நிலை நிறுத்துமா? RajMohan Babu
Extremes எங்கேயும் தேவை இல்லை. என்னை பொறுத்தவரை நட்புக்களை பற்றி ஒரு கணிப்பு உண்டு.
” நமக்கு சோதனையான காலம் வரும்போது உடன் இருப்பதே நட்பு “. அந்த சோதனையான காலம் என்பது நம்மின் இன்னொரு பக்க உண்மை தெரிய வரும் வேளை. அப்போது உடன் இருந்தால் மட்டுமே அவர்கள் நட்பு . இது உறவுகளுக்கும் பொருந்தும். பெற்றோர்கள் இயல்பாக இருப்பார்கள். இல்லை எனில் அவர்கள் பெற்றோர்களாக இருக்க வாய்ப்பில்லை. ( அந்த இன்னொரு முகத்தில் ஒரு சமுதாய நியாயம் இருப்பின் ! )
ஆக … நட்பு என்பதே .. கடின காலம் வரும்போது தான் உண்மையா பொய்யா என்று தெரிய வரும் என்பதால் .. என்னை பொறுத்தவரை 100% சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். தேவையானதை நான் 100% சொல்லி விடுகிறேன். தேவை இல்லை என்பதை 0 % இல் வைக்கிறேன்.
பதில் உதவும் என நினைக்கிறேன். கேள்விகள் இருப்பின் கேட்கவும் .