Q and A 012
வாழ்வின் சில தருணங்களில் எடுத்த முடிவு தவறாகும்போது அங்கேயே நிறுத்தி கொள்ள வேண்டுமா? அல்லது மீண்டும் தொடங்கலாமா….?சந்தோஷம் என்பது ‘நான்’என்பது மட்டுமா இல்லை’நாம்’என்பதும் தானா? Kavitha Suresh
1. நிறுத்தி கொள்ள வேண்டியதை நிறுத்தி விடலாம். அதுதானே பாடம் . ஆனால் அனைத்தையும் நிறுத்த வேண்டியது இல்லை.
2. மீண்டும் தொடங்கலாம். ஒரே ஒரு எச்சரிக்கை மட்டுமே. கடந்த அனுபவம் மனதில் இருக்க வேண்டும். அந்த அனுபவம் சார்ந்தே மீண்டும் தொடங்கும் வாய்ப்பு வரின் … அப்படி ஒன்றை தொடங்க வேண்டியது இல்லை.
3. சந்தோஷம் நான் / நாம் எல்லாம் இல்லை. குடும்ப வாழ்வில் தனிமைக்கு ஏங்கும் பலரை கவனித்து இருக்கிறேன். தனி வாழ்வில் குடும்பத்திற்கு ஏங்கும் பலரை கவனித்து இருக்கிறேன். ஆக .. எடுத்து கொள்ளும் பக்குவத்தில் இருக்கிறது சந்தோஷம். இன்னொன்று நாம் என்பது ஒன்று இல்லவே இல்லை. இரு ‘நான்’கள் மட்டுமே.
இதெல்லாம் இருக்கட்டும். எம் தனிப்பட்ட பதில் ஒன்று இருக்கிறது. இயற்கை என்று ஒன்று இருக்கிறதே .. அதற்கு தெரியும் நிற்க வேண்டிய, தொடர வேண்டிய, இணைய வேண்டிய, தனித்து செல்ல வேண்டிய … கணம் எதுவென்று. சரியான நேரத்தில் அது சரியான முடிவுகளையே எடுக்கும்.
கேள்விக்கு பதில் கிடைத்த்திருக்கும் என்று நம்புகிறேன். இன்னும் கேள்விகள் இருப்பின் கேட்கவும்.





