Slogging Songs : 002
காலையில் 10000 steps முடிப்பதை போல ஒரு சுகம் உண்டா என்று தெரியவில்லை. Race Course அழகாக அமைதியாக நிற்கிறது. அத்துணை பேச்சுக்கும் witness ஆகிறது.
” பரவாயில்லை மன்னிச்சிடு தாத்தா . நல்லா இருக்கட்டும் ” என்று ஒரு இளம் தலைமுறை தன் தாத்தாவிடம் சொல்லுவதை விட நல்ல காலை இருக்க முடியுமா என்ன ?
இன்று என்னுடன் பயணித்த பாடல் பல காலமாக என்னுடன் வருவது.
” சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச .. ”
என்ன அழகான பார்வை. பொதுவாக சட்டை பைக்குள் இருக்கும் பலவற்றில் புகைப்படம் முக்கியமானதாக இருக்கிறது. மார்புக்கு அருகில் இருக்கும் சட்டை பை நிறைய கதைகளை சொல்ல விரும்பும் மௌன அறை. எம் சட்டைப்பையில் சில காலம் வரை பேனாவும், பின் பணமும், பின் Mobile ம், பின் வெறுமையாகவும் ஆகியது. நான் வைத்திருக்கும் புகைப்படம் virtual ஆனது. தொட்டு தொட்டு உரச வேண்டியதே இல்லை. அங்கேயே தான் இருக்கிறது.. 😊😊😊
” கண் விழித்து சொப்பனம் கண்டேன் ”
எங்கோ பார்த்துக்கொண்டே எங்கோ பார்க்கிறோமா ? ஆம் எனில் கண் விழித்து சொப்பனம் காண்பது யதார்த்தமே. யாருடன் பேசுகிறோம் என்பதை கண்கள் சொல்லும். Mostly Fixed eyes எல்லாமே .. கண் விழித்து சொப்பன நிலை.
” தீயின்றி திரியுமின்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே கண்டு கொண்டேன் ”
தேகம் எரிதல் என்பது வேறு நிலை. எண்ணங்களால் எரிக்க முடியும். இங்கே புகையுமில்லை. மிச்சமுமில்லை. அதுவே எரிந்து அதுவாகவே குளிர்ந்து .. ! 😊😊😊😊
” கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன் ”
கண்களை போல வசீகரிக்கும் மௌன காட்சி ஏதும் உண்டா இவ்வுலகில் ? ஒரே ஒரு நிலைப்பார்வையில் எவ்வளவு புரிகிறது ! ?
” மழை அழகா ? வெயில் அழகா ?
கொஞ்சும்போது மழை அழகு
கோபப்பட்டால் வெயில் அழகு ”
மழைக்கொஞ்சல் வித்தியாசமானது. சட்டென வாகனத்தை நிறுத்திவிட்டு மழையில் நனைந்து .. மனம் பிடித்த மனிதர்களுடன் கொஞ்சுவது இருக்கிறதே .. ! அது சொல்லும் நினைவுகள் எப்போதும் மௌனமாவதில்லை ! வெயில் கோபம் எல்லாம் கொஞ்ச நேரம் தான். ஒரு மௌன மரத்தின் நிழல் போதும் – குளிர் அணைக்க.
பாடலை கண்டுபிடியுங்களேன்.
( என்ன சார் .. ஏதாவது விசேஷமா என்று கேட்பவர்களுக்கு …
” Menu வில் இருப்பது போல உணவுகள் வருவதில்லை . Menu is not the Meal ”
என்று சொல்லிக்கொண்டு ….
( சும்மா Machine மாதிரி நடந்துவிட்டு 10000 steps என்று பதியாதீர்கள் மக்களே. அனுபவ பகிறல் முக்கியம் ! )





