Slogging Songs 007
#sloggingSongs ; 007
இன்று உடன் பயணித்த பாடல் என் Fav.
” என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா ?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா ?
நெஞ்சின் அலை உறங்காது ”
ஆண் பெண் உறவில் தனியாக உணர்ச்சிகள் இருக்கிறது என்று புரிவதே .. அந்த உறவின் மகத்துவம். ஒரு பக்க உணர்ச்சிகளை வைத்துக்கொண்டு இன்னொரு பக்க உணர்ச்சிகளை விளையாட்டு பொம்மையாய் வைப்பதே பல வீடுகளின் பிரச்சினை. இரு பக்க விளையாட்டு பொம்மை நினைப்பும் கொடுமை. Mask அங்கேதான் வருகிறது. ஆக .. தனியாக என்ற வார்த்தைக்கு இருக்கும் Space ஐ கொடுத்து விட்டால் இருபக்க ஆளுமையும் மகிழும்.
” உன் இதழ் கொண்டு
வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு
விழி மூட .. வா
உன் உடல் தான் என் உடை அல்லவா ? ”
இமை கொண்டு விழி மூடுதல் ஒரு அழகான நிகழ்வு. காதலில் இது கடக்கா மனிதர்கள் வாய்ப்பில்லை. இமை கொண்டு விழி மூடலில் arrest ஆன ஆளுமையும், arrest செய்த ஆளுமையும் .. மௌனம் காக்கும். இங்கே தண்டனைகள் பேச்சுகள். பேச ஆரம்பித்தால் ” பேசாதே ” என்று சொல்லும் order தான் பெரும் தண்டனை. அதே நேரம் பெரும் blessing. பின்னே .. பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பேச நினைத்ததை புரிந்தால் .. அதை விட அழகான வாழ்க்கை உண்டா இவ்வுலகில் ?
” தினம் ஊசலாடும் என் மனசு
அட ஊமை அல்ல என் கொலுசு ”
இந்த உணர்வு வந்துவிட்டால் ஊசலாடும் மனசு என்பது இயல்பு. கொலுசு ஒரு representation. அமர்ந்து இருக்கும் போது கொலுசுகள் ஒலி எழுப்புவதில்லை. இயங்க ஆரம்பித்தால் ?
என்ன ஒரு அழகான பாடல் இது ? ரஹ்மான் அமைதியாக உள்ளே வந்து செல்லும் பாடல்களில் இதுவும் ஒன்று.
என் இன்றைய கடமைகளை முடித்து ( இப்போதுதான் ), ஒரு வெந்நீர் குளியலுக்கு பின், மொட்டை மாடியில் அமர்ந்து, நட்சத்திரங்களுக்கு witness ஆக அமர்ந்து .. ஒரு பாடல் கேட்டு ..
மதி மயங்காமல் சிரித்து ரசிக்க முடியும் எனில் .. அது இந்த பாடலாகத்தான் இருக்க முடியும் !
என்ன கண்டுபிடிக்க முடிகிறதா ?