தூக்கமது கண் விடேல் 004
#தூக்கமது கண் விடேல்
ஒரு 24 மணி நேரம் நீங்கள் தூங்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். என்ன ஆகும் என்று யோசித்தது உண்டா ? வெளியே நாம் Tired ஆக இருப்போம் என்று நமக்கு தெரியும். ஆனால் உள்ளே ?
மூளைக்கு செல்லும் குளுக்கோஸ் அளவில் 6 % – ஆறு சதவிகிதம் குறையும். சரி. அப்போ என்ன ஆகும் ? ஒன்றுமில்லை. நீங்கள் முடிவெடுக்க தயங்கும், ஏதோ ஒன்றை பேச நினைத்து வேறு எதையோ பேசும் மனிதனாக நிற்பீர்கள். அதுமட்டும் அல்ல.
இந்த குளுக்கோஸ் குறைவு நம்மை Craving நோக்கி இழுக்கும். இங்கே தான் நாம் Chips, Chocolates, Sugar, இனிப்பு சார்ந்த பொருட்களை தேட ஆரம்பிக்கிறோம். அதாவது .. தூக்கம் இழந்ததால், குளுக்கோஸ் குறைவால் தான் … இந்த பொருட்களின் விற்பனை அமோகமாக நடக்கிறது. இரவுக்காட்சி பார்க்கும்போது, கிரிக்கெட் பார்க்கும் போது என்று ஏதாவது கொறிக்க தோன்றுகிறதே .. இப்போது ஏன் என்று புரிகிறதா ? ஆம். நீங்கள் நினைப்பது சரிதான். தூக்க இழப்பிற்கும், குளுக்கோஸ் குறைவிற்கும், craving கிற்கும், சர்க்கரை in take க்கிற்கும் .. அதனால் எடை கூடுவதற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.
இதைவிட முக்கியமான ஒரு அறிவியல் இங்கே இருக்கிறது. மூளைக்கு செல்லும் குளுக்கோஸ் 6% அளவிற்கு குறையும் என்று பார்த்தோம். அது மூளை முழுக்க ஒரே மாதிரி அளவில் குறைவதில்லை. உதாரணத்திற்கு Parietal & Pre Frontal Lobe பகுதிகளில் 12 முதல் 14 % வரை குறைகிறது. இந்த பகுதிதான் .. நம்மை சரி தவறு என்று யோசிக்க வைக்க உதவுகிறது. நன்றாக தூக்கம் இல்லை எனில் .. நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக போகும் வாய்ப்பு இங்கே இருந்துதான் ஆரம்பம். ஆக .. தூக்கத்தை இழந்து, நல்லது கெட்டது சரியாக உணர முடியாமல் .. தவறான முடிவுகள் எடுத்து, மன உளைச்சல் பெற்று .. மருத்துவரிடம் சென்று, தூக்க மருந்து வாங்கி … ஹ்ம்ம் … என்ன மாதிரியான மனிதர்கள் நாம் ! ?
பொதுவாக நாம் செய்யும் ஒரு தவறு – busy – யாக இருப்பதாக காட்டிக்கொண்டு வேலை செய்வது. தூக்கம் context இல் – நீங்கள் சரியாக தூங்காமல், பரபரப்பாக வேலை செய்வதையும், சரியாக தூங்கி எழுந்து வந்து வேலை செய்யும் ஒரு நபரையும் ஒப்பிட்டால் .. வரும் புள்ளி விபரங்கள் ஆச்சர்யமானவை.
கவனிப்போம்.
• தூக்கம் இழந்த மனிதர்கள் ஒரு வேலையை செய்து முடிக்க 14 % நேரம் அதிகம் எடுக்கின்றனர்.
• அப்படி எடுத்தாலும் அவர்கள் செய்யும் வேலையில் 20% error வருகிறது.
• தூக்கம் இழந்த மனிதர்கள் வேலையை செய்து முடிக்கும்போது ” எப்படா முடிப்போம் ” எண்ணம் வருவதால் .. வேலை ஒரு Formality யாக மாறுகிறது. Involvement இருக்க வாய்ப்பில்லை.
• வேலை முடிந்தவுடன் தூங்க செல்லும் பரபரப்பில் நிறைய பொருட்களை அங்கும் இங்கும் வைத்து மறந்து செல்வது நிறைய நடக்கிறது.
• குளுக்கோஸ் அளவு மூளையில் குறைந்து இருப்பதால் .. தூக்கம் தொலைந்த வேலையிலும் ஏதாவது உண்ண வேண்டும் என்ற எண்ணத்திற்கு அவர்கள் வருகிறார்கள். எதையோ உண்கிறார்கள். அந்த உணவுகள் செமிக்கா உணவுகளாக உடலில் மாற ஆரம்பித்து நோய்க்கான களம் தயாராகிறது.
அதிர்ச்சியாக இல்லை ?
இலவசமாக இயற்கை கொடுத்திருக்கும் கொடை தான் தூக்கம். அதை இழந்துவிட்டு, busy யாக இருந்து, நிறைய சம்பாதித்து, பணத்தை மீண்டும் உடலுக்கு செலவழிப்பதில் என்ன புத்திசாலித்தனம் இருக்க போகிறது என்று தெரியவில்லை !
பயிற்சி ;
ஒரு வாரத்திற்கு படுக்க வேண்டிய நேரம், எழ வேண்டிய நேர அளவினை குறித்து கொள்ளுங்கள். ( 07 முதல் 08 மணி நேரம் வர வேண்டும் )
நீங்கள் சாதாரணமாக 05 மணி நேரம் தூங்குபவர் எனில் முதல் வாரத்தில் அது 05.30 மணி நேரமாக மாறும். 1 நிமிடம் அதிகமாக தூங்கி இருந்தாலும் உடலுக்கு நன்மையே.
உங்களுக்கான Challenge இதுவே.
” நேற்றைய உறக்கத்தை விட இன்றைய உறக்க அளவு அதிகமாக வேண்டும் – 01 நிமிடமோ அல்லது 01 மணி நேரமோ “.
என்ன செய்ய ஆரம்பிக்கலாமா ?