Slogging Songs : 17
#SloggingSongs : 17
“அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன் ”
பிரிதலில் புரிதல் என்று ஒன்று உண்டு. அது கொடுக்கும் வாழ்க்கை பாடங்கள் தன் தவறுகளை உணர வைக்கும். அப்படி ஒரு புரிதல் கிடைக்கவில்லை எனில் பிரிதல் என்பது revenge ஆகவே மாறும். இன்னும் சொல்ல போனால் பிரிதலின் நோக்கமே புரிதலை அதிகப்படுத்திக்கொள்ளவே !
நிறைய மனிதர்களின் பிரிதல் ஒரு ஆறா காயமாகவே இருக்கிறது. இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை ? கடந்து போறது தான் வாழ்க்கை எனில், ஆறா காயம் எதற்கு ? டால்ஸ்டாய் அழகாக சொல்லுவார் ..
” அப்படி ஒன்று நமக்குள் இருந்ததா என்று நினைக்கும் வகையில் மறக்க வேண்டும் “.
அப்படி கடந்து செல்லும்போது பிரிதல் அழகான நினைவாக settle ஆகும். விளக்கை அணைத்து அழ வேண்டிய அவசியம் இல்லை.
” அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எறித்தேன்
உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் போடாதா ”
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் அழகு. ஆனால் தாலி என்பதின் யதார்த்தம் – unconditional Understanding. அது இருக்கும் வரை முடிச்சு விழுவது, அவிழ்வது, மீண்டும் விழுவது பற்றி எல்லாம் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை.
பழைய மாலையில் புதிய பூக்கள் சேருவதால் புதியதாக மாறவெல்லாம் வாய்ப்பில்லை. அதற்கு பதில் புதிய மாலையில், புதிய பூக்களுடன் பழைய ஜோடிகள் சேரலாம். தேவை இல்லை என்றால் தேவை இல்லை. அவ்வளவே. தேவை எனில் புதியதாக தேவை. அவ்வளவே.
என்னவோ தெரியவில்லை .. இந்த பாடலை கேட்கும்போது ஒருமுறை நின்று ரசித்து நகர்வேன். City யை நிறுத்திவிட்டு அமைதியாய் கேட்பதும் உண்டு. Headphone இல் பெண் பாடகி பாடுவதை கேட்கும்போது .. கண்களில் ஏனோ கொஞ்சம் நீர் கோர்க்கும்.
ஆனால் ..
இதெல்லாம் ” கடந்து போறது தானே வாழ்க்கை ” என்ற ஓற்றை வரியில் … இந்த பாட்டினை சுக நினைவுக்கு transfer செய்துவிட்டு ..
பாட்டின் முதல் வரியை வான் நட்சத்திரம் பார்த்து கேட்பதுண்டு.
அந்த வரி என்ன என்று யூகிக்க முடிகிறதா ?





