Training Diaries : 004
#TrainingDiaries : 004
” என்னை குறை சொன்னால் எனக்கு எரிச்சலாக வருகிறது. கோபப்படுகிறேன். என்னை எப்படி சொல்லலாம் ? என்ற கேள்வி எழுகிறது. என்ன செய்ய ? ”
சொன்ன அவருக்கு 30 plus வயது இருக்கலாம்.
” குறை சொன்னால் சொல்பவர்கள் மேல் கோபம் வருகிறதா ? இல்லை உங்கள் மேல் கோபம் வருகிறதா ? ”
கொஞ்சம் யோசித்தார்.
” சொல்பவர்கள் மேல் ”
நான் சிரித்தேன்.
” ம்ம்ம். சொல்பவர் மேல் கோபம் வருகிறது என்றால் உங்களுக்கு identity Crisis – அதாவது அடையாள பிரச்சினை. என் அடையாளம் எப்போதுமே பெரியது என்று நினைப்பதே இப்படி கோபம் வரக் காரணம். ”
” நீங்கள் சொல்வது சரி தான். என் மேல் கோபம் வந்தால் ? ”
” உங்களின் மேல் கோபம் வந்தால் உங்களுக்கு Inferiority Crisis. அதாவது எல்லோர் முன்னிலையிலும் நாம் இப்படி ஆகிவிட்டோமே / மற்றவர்கள் முன் நாம் தரம் தாழ்ந்து நிற்கிறோமே / போன்ற சிந்தனைகளால் வரும் கோபம் ”
” அப்போ என்ன தான் செய்வது ? ”
” மிகவும் எளிது. சரியாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லை எனில் சிரித்து கடந்து விடுங்கள். வேறொன்றும் அதற்கு Value இல்லை ”
அமைதியாய் தலையாட்டினார்.
” அதே சமயம் குறை சொல்வதில் இருக்கும் நோக்கத்தை கவனியுங்கள்.
1. நீங்கள் வளர சொல்லப்படுவது – உடனே எடுத்துக்கொள்ளுங்கள்.
2. உங்களை வளர விடாது தடுக்க சொல்லப்படுவது – மனதில் உறுதியாக முடிவு செய்யங்கள். சொன்னவர்கள் முன் செயல்களால் பேசிவிடுங்கள்
3. உங்களை குறை சொல்ல மட்டுமே சொல்லப்படுவது – ஒரு Strong offence ஆடிவிடுங்கள். ஆடிவிட்டு எப்போதும் போல உங்களின் வேளைகளில் கவனம் செலுத்துங்கள் ”
Training முடிந்து செல்லும்போது சொன்னார்.
” எங்கே தவறுகிறேன் என்று புரிகிறது நன்றிகள் ”
நன்றியை பெற்றுக்கொண்டு சொன்னேன்
” எவ்வளவு பேசினாலும் ” Best Revenge is Massive Success ” என்பதில் கவனமாக இருங்கள். அதுதான் உலகின் மிகச்சிறந்த பதில் “





