Training Diaries 007
#TrainingDiaries : 007
Zenlp Academy
www.zenlpacademy.com
” ஏன் சில குழந்தைகளுக்கு நம்மை பிடிக்கிறது ? ஏன் சில குழந்தைகளுக்கு நம்மை பிடிப்பதில்லை ? ”
கேட்டவருக்கு நடுத்தர வயது.
” குழந்தைகளால் மனிதர்களை அடையாளம் காண முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களால் தங்களின் அலைவரிசையில் இல்லாத, match ஆகாத, முரண்படுகிற மனிதர்களிடம் இருந்து விலக முடியும் – சில நொடிகளில் ! ”
” அப்படியா ? ”
” ஆம். குழந்தைகள் பொதுவாக ஐம்புலங்களால், அவற்றின் செயல்களால் .. நம்மை கண்டுகொள்கின்றன. 1. பார்த்தல். 2. கேட்டல். 3. உணர்தல். 4 நுகர்தல் 5. சுவைத்தல்
கரடு முரடான ஆசாமிகளிடம் இருந்து பார்வையால் அவர்கள் விலகுவது இங்கே தான். அதிரும் குரல்கள் / சத்தங்கள் அவர்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை. Curious மனநிலையே குழந்தைகளின் மனநிலை. Pre Constructed மனநிலை அவர்களுக்கு பிடிப்பதில்லை. சிங்கம் எப்படி நீச்சல் அடிக்கும் ? போன்ற curious கேள்விகளால் நிறைந்தது அவர்களின் உலகம். சுவைத்தலில், நுகர்தலில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு Preference உண்டு. ”
அவர் கேட்டார்.
” சிறு குழந்தை இவ்வளவையும் கவனிக்குமா ? ”
” ஆம். குழந்தைகள் வேண்டாம் என்று விலகும் மனிதர்களிடம் மேற்சொன்ன ஏதோ ஒன்று அல்லது சில அல்லது அனைத்துமே .. முரண்பட்டிருக்கும். ”
அவர் ஆச்சர்யமாக அமர்ந்திருந்தார்.
” குழந்தைகள் நம்மை select செய்ய தொடங்கினால் .. ( நாம் அல்லது மற்றவர்கள் வற்புறுத்துவதால் அல்ல .. தாமாகவே ! ) நாம்.. நம்மை .. curiosity நிறைந்த ஐம்புலன்களை சரியாக வைத்திருக்கும் மனிதர்கள் என்று நினைத்துக்கொள்ளலாம். ”
” select செய்யவில்லை என்றால் ”
” மிக எளிய காரியம் ஒன்றை செய்ய வேண்டும். முதிர்ந்த மனிதர்கள் ( Matured ) என்று ஒரு முகமூடி அணிந்து பூமியில் வலம் வருகிறோமே .. அதை முதலில் அவிழ்த்து எறிய வேண்டும். ”
” ஆக நாமும் குழந்தையாக மாற வேண்டும் ”
அவர் கேட்டதற்கு சில நொடிகள் சிரித்து பின் பதில் சொன்னேன் ..
” நாம் எல்லோருமே குழந்தைகள் தான். ஆகவே மாற வேண்டியதில்லை. முதிர்ந்த மனித – முகமூடியை கழட்டி எறிந்தால் போதுமானது. நம் கணவன், மனைவி, Manager, CEO, Business Magnet, Collector .. வேஷங்கள் குழந்தைகள் உலகில் misfit வேடங்கள். ”
” நான் வீட்டிற்கு CFO வாக சென்று விடுகிறேன். மற்ற குழந்தைகளை பார்க்கும்போதும் அப்படியே தான் பார்க்கிறேன். என் தவறு புரிகிறது எனக்கு ” என்று சிரித்தார்.
” CFO வாக செல்ல வீடு எதற்கு ? ” என்று நானும் சிரித்தேன்.
General Manager ஆக, Doctor ஆக, Engineer ஆக.. இன்னும் என்னென்னவோ வாக வீடு செல்லும் நீங்களும் இப்போது சிரிப்பதை நான் கவனிக்கிறேன். ரசிக்கிறேன். அது தவறை ஒப்புக்கொள்ளும் சிரிப்பாக இருப்பதால் !





