Training Diaries: 009
#TrainingDiaries ; 009
www.zenlpacademy.com
” Teen age பெண்ணுடன் ஒரு அப்பாவாக நான் எப்படி பேசவேண்டும் ? ”
நடுத்தர வயது அப்பா அவர். கண்ணில் கொஞ்சம் கவலை. முக சுருக்கத்தில் சோகம். வெளிறிய சிரிப்பு. இவையே நிறைய சொல்லின அவரைப்பற்றி !
” நீங்கள் ஏன் பேசவேண்டும் ? ” என்று நான் கேட்ட கேள்வி அவருக்கு அதிர்வாய் இருந்தது.
” நான் பேசாமல் ? ”
என்று கேட்ட அவர் பதிலுக்கு தயாரானார்.
” பொதுவாக Teen Age பெண் தான் நம்முடன் பேச வேண்டும். நாம் பேசவேண்டும் என்று நினைப்பதே ” நான் சொல்கிறேன் நீ கேள் ” – குடும்ப அமைப்பை விவரிக்கிறது. பொதுவாக Teen Age பெண் கேட்க வேண்டிய, பேச வேண்டிய கேள்விகள், பதில்கள் நிறைய அவர்களின் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். இவற்றை பொதுவாக அம்மா விடம் கேட்பதை விட அப்பாவிடம் கேட்கவே பெண் விரும்புவாள். ஏன் அப்படி ? ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளின் தந்தை தான் Real Time Hero. ஆனால் .. ஆண் பெண் இயல்பு இடைவெளி தான் பெண்ணை அப்பாவிடம் பேச விடாது தடுக்கிறது. அந்த நேரத்தில் அப்பா பேச ஆரம்பித்தால் .. பெண் சுத்தமாக பேசுவதையே நிறுத்தி விடுகிறாள். ”
எனக்கு எதிரில் அமர்ந்து இருந்த .. அந்த அப்பாவின்மௌனத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
” ஒரு Teen Age பெண் தன் அப்பாவிடம் தான் நினைப்பதை, சொல்ல முடிந்த அளவிற்கு அப்பா ” கேட்கும் ஆணாக ” மாறினால், பல பிரசச்சினைகளுக்கு முடிவு வந்துவிடும். இதை செய்யாத போது – இதை செய்யும் ஒரு Teen Age பையனை பெண்ணுக்கு பிடித்து விடுவதில்.வியப்பென்ன இருக்க முடியும் ? ”
” உள்ளே தைக்கிற படி சொல்றீங்க. திரும்ப சொல்லுங்க ”
” தான் நினைப்பதை Teen Age பெண் தன் தந்தையிடம் சொல்ல முடியவில்லை எனில், அதை தந்தை கேட்க தயாராக இல்லை எனில், கேட்கும் எவனோ ஒருவனை ( அவனின் நோக்கம் எதுவாகினும் ) அவளுக்கு பிடித்து போவதில் வியப்பென்ன இருக்க முடியும் ? ”
” அறையிரீங்க சார் ”
” பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். பெண்ணை பெற்ற பின்னாவது கேட்போமே ? ”
சொல்லிவிட்டு … அமைதியாய் சிரித்தேன்.
” பொதுவாகவே நான் அவளிடம் நிறைய பேசுவேன். இனி பெண்ணிடம் கேட்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று புரிகிறது. ”
” மனைவியிடமும் ” என்று நான் சிரிக்க அவரும் சிரித்தார்.
” மனைவியும் இன்னொரு அப்பாவின் பெண் தானே ? ”
என்று நான் சொன்னவுடன் … தலை குனிந்து அமைதியாக அமர்ந்து இருந்தார். கண்ணில் இலேசாக நீர். முகத்தில் வெறுமை கூடிய சிரிப்பு.
பொதுவாக மனிதர்கள் தம் தவறை யதார்த்தமாக உணர்ந்துவிடுவார்கள். அவர்கள் நல்லவர்கள் தான். ஆனால் … அவர்களின் கற்ற அறிவு தான், அல்லது கற்றதாக நினைக்கும் அறிவுதான் … அவர்களை உணர விடாமல் தடுக்கும்.
” எவ்வளவு பெரிய தவறை செய்துகொண்டு இருக்கிறேன் நான். என் பெண் என்னை விட்டு செல்லமாட்டாள். ஆனால் நான் இப்படி ” பேசிக்கொண்டே ” இருந்தால் பெண் மட்டுமல்ல .. மனைவியும் கூட என்னிடம் இருந்து விலகி செல்லும் வாய்ப்பை நான் தானே ஏற்படுத்துகிறேன் ?. Thanks Jay. ”
இருவரும் கை கொடுத்துக்கொண்டோம். பெண் குழந்தை பெற்ற அப்பாக்களின் விரல்கள் தனக்குள் மௌனமாக பேசிக்கொண்ட தருணம் அது.
நீங்கள் எப்படி ?
” பேசுவதை கேள் ” – மிரட்டல் அப்பாவா ?
இல்லை ..
” சொல்லும்மா .. கேட்கிறேன் ” என்னும் நட்புடன் கூடிய அப்பாவா ?
Jayasekaran Zen