Jerspective : 003
#jerspective
சேலம் ராக்கிப்பட்டிக்கு அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டிக்கு அதிகாலை சென்று விட்டேன். என்னவோ தெரியவில்லை .. அப்போதெல்லாம் .. சூரிய உதயம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. தரையில் இருந்து எடுப்பதை விட தண்ணீர் தொட்டிக்கு மேல் இருந்து எடுக்கும் பட்சத்தில் எப்படி இருக்கும் என்று ஒரு பரபரப்பு. கிட்டத்தட்ட 40 / 50 படிக்கட்டுகள் மேலேறி .. தண்ணீர் தொட்டியின் மேல் புறம் அமர்ந்து நீல வான் பார்த்தால் இருள் மறைந்து / சூரிய உதயம் நிகழ வான் தயாராகிக்கொண்டு இருந்தது. மிக அரிதாகவே இப்படி காட்சிகள் கிடைக்கும்.
வழக்கமான angle வேண்டாம் என்று தண்ணீர் தொட்டியில் படுத்து, கீழ்ப்புற angle இல் இருந்து சூரிய உதயத்தை படம் பிடித்த போது முழு நிறைவு. இந்த புகைப்படத்தை புரிந்து கொள்ள … தலைக்கு மேல், வலப்புறமாக .. வைத்து பார்த்தால் அந்த உதயத்தின் origin இன் வெளிச்சம் நமக்கு புரியலாம்.
Panasonic Point and Shoot இல் எடுத்த படம் இது. 2010 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் சூரிய உதயம் என்றால் miss செய்ய மாட்டேன். இப்போது பார்வை விரிந்து இயற்கையின் வேறு பக்கங்களுக்கு திரும்பி இருக்கிறது.
புகைப்படங்கள் இல்லா பூமியை நினைக்க முடியவில்லை. வாழ்ந்த வாழ்க்கையின் தடம் தான் புகைப்படங்கள். அவை இல்லை எனில் …கடந்த காலம் என்பது வெறும் கற்பனையாகவே மாறிப்போகும்.
நாளை அடுத்த படத்துடன் சந்திக்கிறேன்.