Jerspective : 006
#100Photographs ; 004
💐💐💐
காற்றை விலை கொடுத்து வாங்குவதை பெருமையாக சொல்லும் நாகரிகம் எனக்கானது அல்ல. இயற்கை அளிக்கும் வரவேற்பில் எனக்கு காற்றும் கலந்தே கொடுக்கப்படுவதால் எந்த காலத்திலும் காற்றை நான் விலைக்கு வாங்க போவதில்லை.
நகரம் என்று சொல்லப்படும் நரகத்தை கடந்து .. இயற்கையின் பக்கங்களுக்கு சென்று நின்றால் .. அங்கே சுவாசத்திற்கான வாசம் நிறை காற்று இலவசம். பெரு வெளியில் தென்றல் நெசவு செய்யும் மென் சந்தத்தில் .. இசையாய் இருப்பது என் மூச்சுக்காற்று உள்ளே / வெளியே இயங்கும் சத்தமே என்பதில் அங்கு வியப்பில்லை ! நகரத்தில் நம் மூச்சுக்காற்று இயங்கலின் சத்தம் கேட்டதுண்டா நாம் ?
மனிதன் இல்லை எனில் இயற்கை சுத்தமாக இருக்கிறது. மனிதன் வந்தால் இயற்கை கெட்டுபோகிறது. மனிதன் தான் இயற்கையின் மோசமான மிருகம். இதில் ஆறு அறிவு என்று அவனுக்கு பெருமை வேறு ! எந்த ஒரு மிருகமும் தொழிற்சாலை ஆரம்பித்து இயற்கையை கெடுப்பதில்லை !
வாழ்வதில் ஈகை மிக முக்கியம். ஈகை க்கு திருநாள் என்றே மனிதம் வைத்திருக்கிறது. அப்படி எல்லாம் யோசித்த மனிதத்திற்கு இயற்கை அதை கொடுக்கிறது. ஆனால் இயற்கைக்கு நாம் கொடுகிறோமா ? என்பது மிக முக்கிய கேள்வி.
இலவச சுவாசம் விற்பனைக்கு என்று வரும்போது .. நான் உயிரோடு இருக்க போவதில்லை. ” நாம் உயிரோடு இருக்க போவதில்லை ” என்று நினைப்பது அவரவர் சுதந்திரம் !
( புகைப்படம் ஊட்டியில் outskirts இல் எடுத்தது. 2017ல் )