நான் எனப்படும் நான் : 24
#நான்எனப்படும்நான் ;
( Exclusive Write up for and About Trainers )
பயிற்சி வகுப்பு என்பது இன்னொரு தொழில் அல்ல. காலையில் சென்று வேலையை முடித்து மாலை வீடு திரும்புதல் போன்றது அல்ல அது. அது ஒரு தவம். வரம். இயல்பு நிலை. யதார்த்தம். அகத்தில் இருந்து எழும்பும் ஒரு சக்தியை, புறத்தில் கொடுத்து, இன்னொரு அகத்தில் கேள்விக்குறியாய் மரித்தல் !
💐💐
என்னிடம் பேசும்போது சிலர், பயிற்சி வகுப்பிற்கு செல்வதை அலுவலகம் செல்வது போல சொல்லும்போது .. எனக்கு சிரிப்பு வரும். வைரம் தெரியாதவர்களுக்கு அது just ஒரு மின்னும் Carbon தானே ?! அலுவலகம் செல்கிறோம். கோபமாக செல்லலாம். மகிழ்வாக செல்லலாம். சோகமாக செல்லலாம். படபடப்பாக செல்லலாம். எப்படி வேண்டுமானாலும் சென்று எப்படி வேண்டுமானாலும் திரும்பலாம். பயிற்சி வகுப்பு என்பது அப்படி அல்ல. சமநிலை / Balanced மனநிலையில் சென்றால் சமநிலை /Balanced மனநிலையை உருவாக்க முடியும் ! அப்படி ஒரு challenge அங்கே உண்டு !
💐💐
ஒருமுறை எனக்கொரு feedback வந்தது.
” என்னை மீண்டும் பெற்றிருக்கிறேன். நன்றி ஜெய் ”
அந்த feedback கினை கேட்கும்போது …எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன்
” எம் சமநிலையே .. உமக்கு எம் நன்றிகள் ! ”
பின்னே ? தெளிந்த நீரில் தானே தன் முகத்தினை ஒருவரால் பார்க்க முடியும் ?
💐💐
பயிற்சி வகுப்பு தொடங்கும் முன்பு, பின்பு, பயிற்சி வகுப்பில் … என்றெல்லாம் சமநிலையை வாங்கவோ விற்கவோ முடியாது. சமநிலை என்பது எப்போதும் இருக்கும் நிலையாக வாழ வேண்டும். அப்படி வாழ முடியாதவர்கள் பயிற்சி வகுப்பு நடத்த வரவே வேண்டியதில்லை. கலந்துகொள்ளும் ஒருவர் அழக்கூடும். கலந்து கொண்ட ஒருவர் புகழக்கூடும். கலந்து கொள்ள நினைக்கும் ஒருவர் சந்தேகமாக கேள்விகள் கேட்கக்கூடும் ! அனைத்திற்கும் ஒரே மனநிலை தான் ! ஆம். அந்த மனநிலை என்பது ….
பற்றிக்கொண்டு பற்றாமல் வாழ்வது ! மனம் பற்றி இருக்கும். உடல் பற்றி இருக்காது. இது புரிந்தவர்களின் பயிற்சி வகுப்புகள் வேறு உயரத்தை அடையும் !
💐💐
படபடப்புடன் சுற்றிக்கொண்டு இருக்கும் ஒரு மருத்துவரால் அறுவை சிகிச்சையை ஒழுங்காக செய்ய முடியுமா ? Non Balancing இல் இருக்கும் ஒருவரால் ஒழுங்காக வாகனம் செலுத்த இயலுமா ? என் மருத்துவ நண்பர் ஒருமுறை சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது …
” நாங்களாவது உடலை கவனித்து, தொட்டு, scan செய்து, technical உதவிகளுடன் அறுவை சிகிச்சை செய்கிறோம். ஜெய் அப்படி அல்ல. கண்ணில் தெரியாத மனத்தில், கண்ணுக்கு தெரியா அறுவை சிகிச்சையை செய்து, கண்ணுக்கு தெரியும் மாற்றத்தை கொண்டு வருகிறார். நாங்கள் உடல் மருத்துவர்கள். அவர் மன மருத்துவர் ! ” அரங்கம் கைதட்டி ரசித்த போது .. நான் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.
” எம் சமநிலையே … உமக்கு எம் நன்றிகள் ”
💐💐