Slogging Songs : 22
#SloggingSongs ; 22
சில பாடல்களை மறக்கவே வாய்ப்பில்லை. இந்த பாடல் என் வாழ்வின் personal பக்கங்களில் முக்கியமானது. தோள் தூக்கி நின்று மெதுவாய் நடந்து துள்ளி குதித்து சிரித்த கணங்கள் இன்னும் நினைவில் ! அவ்வளவு அழகு இந்தப் பாடல் !
” நேசபட்டு பட்டு நான் இளைத்தேனே
அஹஹா. ஹா.அஹஹா.ஹ ஹா…
ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலிர்த்தேனே
ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹொ.ஹொய் ”
நேசப்பட்டால் இளைப்போமா ? ஆம். இளைப்போம். ” The Best Diet Program in the World is missing Someone You Love most ! ” என்று நான் சொல்வதுண்டு. ஆம். நேசப்பட்டால் இளைக்க வேண்டும். எடை அதிகரிக்க தானே செய்யும் என்று சொல்பவர்களுக்கு – இன்னும் உடல் சார் யோசிப்பில் இருந்து உங்களின் நியூரான்கள் வெளிவரவில்லையா ? மனம் நேசித்தால் இளைக்கும். மனம் நேசிக்கவில்லை எனில் உடல் அமைப்பு களை இழக்கும்.
” தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம் தட்டு
என் தாளம் மாறாதைய்யா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி ”
என் தாளம் மாறாது என்பதை விட ஒரு statement இருக்க முடியுமா அன்பில் ? நீ எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போ .. நான் என் அன்பில் இருந்து மாறப்போவதில்லை – என்பது போல தாளம் மாறா பாடல்கள் அவை ! உண்ணாமல் உறங்காமல் தவித்து .. என்ன நடந்தாலும் .. தாளம் அதே ! அதே அதே !
” காஞ்சி பட்டு நான் கொடுத்தேனே ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹொய்.ஹொய்
காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே ”
காஞ்சிப்பட்டு கொடுத்து காலமெல்லாம் சுமந்து … இல்லை அது இல்லை. கொடுத்தல் அன்பு. சுமத்தல் பேரன்பு. இங்கே கொடுப்பதும் சுமப்பதும் பொருளும் செயலும் அல்ல. அன்பின் பரிமாணம். சுமக்கும்போது உடலுக்கு வலிக்கும். அது அறிவியல். மனதிற்கு இனிக்கும். அது சொல்ல முடியா அறிவு சாரா இயல் !
” தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
என் கண்ணில் நீ தானம்மா ”
மடியில் போட்டு தூங்க வைப்பதெல்லாம் இருக்கட்டும். தோளில் சுமந்து தூங்க வைத்தது உண்டா ? அது போல் சுகம் ஒன்று இருக்க வாய்ப்பில்லை ! வாய்ப்பே இல்லை !!
என்ன பாடல் நினைவில் வருகிறதா ?
கார்த்திக் சௌந்தர்யா இருவரும் திரையில் இருந்து விலகட்டும். உங்களின் அந்த ஒருவருடன் .. இந்த நாள் இந்தப் பாடலுடன் தொடங்கட்டும் !